2023 பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு கொடுத்த ஒரு ஹாப்பி நியூஸ்

Advertisement

Budget 2023 Income Tax Slab in Tamil

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாகத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிக்கையானது தனி நபருக்கும் மாத சம்பளதாரருக்கும் சாதமாக இருக்காது என வெளியான சில தவறான கணிப்புகள் அனைத்தையும் மொத்தமாக உடைத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

அதனை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் விரிவாக காணலாம். இன்று அறிவிக்கப்பட்ட வருமான வரித் தளர்வுகள் என்ன..? அதனால் மக்களால் எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும்..? போன்ற தகவல்களை பார்க்கலாம்.

Budget 2023 Income Tax Slab in Tamil:

Budget 2023 Income Tax Slab in Tamil

இந்த பட்ஜெட்டின் மூலம் பழைய மற்றும் புதிய வருமான விதிப்பு முறையின் கீழ் வருமான வரி செலுத்தும் தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்கு வரி சுமையைக் குறைக்கும் வகையில் 7 லட்சம் ரூபாய் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax Rebate) சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த Tax Rebate தற்போது 7 லட்சமாக உள்ளது. இதன்படி 7 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் பெறுவோர் தங்களது செலவினங்களுக்கான ஆவணங்களை முழுமையாக தாக்கல் செய்தால் வரியே கட்டாத அளவுக்கு தப்பவும் முடியும். இதனை தான் Tax Rebate என்பார்கள். 

இதையும் படித்து பயன்பெறுங்கள்=>Jio 5G சேவை தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் தொடக்கம் தெரியுமா..?

மேலும் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி விதிப்பு முறையில் இருக்கும் வரிப் பலகை எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் தற்போது உள்ள 2.5 லட்சம் ரூபாய் வரையிலான 0% வரி விதிப்பு அளவு தற்போதைய புதிய வருமான வரி விதி முறையின் கீழ் 3 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூபாய் 50,000 வரை கூடுதல் வரி சலுகை கிடைத்துள்ளது. இந்த கூடுதல் வரி சலுகை பழைய வரி விதிப்பு முறைக்கு கிடையாது.

புதிய வரிப் பலகை:

ஆண்டு வருவாய்  வரி சதவிகிதம் 
0 – 3,00,000 ரூபாய் வரை  0% வரி 
3,00,000 – 6,00,000 ரூபாய் வரை  5% வரி 
6,00,000 – 9,00,000 ரூபாய் வரை  10% வரி
9,00,000 – 12,00,000 ரூபாய் வரை 15% வரி 
12,00,000 – 15,00,000 ரூபாய் வரை  20% வரி 
15,00,000 ரூபாய் மேல்  30% வரி 

 

இதன் மூலம் புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் வரி செலுத்தும் தனிநபர் தங்கள் செலுத்தும் வரி தொகையில் இருந்து 25 சதவீதம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement