ஷேர் ஆட்டோ
நாம் பஸ், கார், பைக், ரயில் மற்றும் சைக்கிள் என பலவகையான முறைகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இவற்றை எல்லாம் விட மக்கள் அனைவரும் ஷேர் ஆட்டோ பயணத்தை தான் அதிகமாக விரும்புகின்றனர். ஏனென்றால் நமக்கு தேவையான நேரத்தில் உடனே செல்வதற்கு உதவியாக இருப்பது ஷேர் ஆட்டோ தான். அதிலும் குறிப்பாக பார்த்தால் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி போன்ற பெரிய நகரங்களில் வாழும் மக்கள் என்ன தான் பேருந்து வசதி இருந்தாலும் கூட அவரசத்திற்கு ஷேர் ஆட்டோவை தான் அணுகுகின்றனர். ஆகையால் ஷேர் ஆட்டோவின் தேவை அதிகமாக இருப்பதால் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் ஒரு புதிய நற்செய்தியை சென்னை மக்களுக்கு அறிவித்துள்ளது. நீங்களும் அது என்ன செய்தி என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றல் பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ரயில் பயணிகள் இனி நிம்மதியா தூங்கலாம்..! நியூஸ் வந்தாச்சு..!
Government Approved Auto in Chennai in Tamil:
மக்கள் வாழும் மற்ற நகரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் அதிக அளவில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அங்கு இன்று வரையிலும் நிறைய நபர்கள் வேலைக்காக செல்கிறார்கள்.
சென்னையில் உள்ள ஆண் மற்றும் பெண் என இரண்டு நபர்களும் அவர்களுடைய அத்தியாவசிய தேவைக்காக வேலைக்கு செல்கின்றனர்.
அப்படி வேலைக்கு செல்லும் பட்சத்தில் என்ன தான் நிறைய பேருந்து வசதி இருந்தாலும் கூட சரியான நேரத்திற்கு செல்வதற்காக பெரும்பாலான மக்கள் ஷேர் ஆட்டோவை நாடி செல்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவிலான தூரத்தில் உள்ள ஊர்களுக்கு ஷேர் ஆட்டோவை மட்டுமே அதிகமாக சென்னை மக்கள் உபயோகப்படுத்துகின்றனர்.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது மக்கள் அனைவரும் ஷேர் ஆட்டோவை தான் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவருகிறது. ஆகையால் சென்னை ஒருங்கிணைந்து போக்குவரத்துக்கு ஆணையம் பொது போக்குவரத்தின் ஒரு பகுதியாக ஷேர் ஆட்டோவை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் இடைநிலைப் போக்குவரத்து திட்டமானது சென்னை நகர கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் தயாரித்து செயல்பட உள்ளது. அதனால் ஷேர் ஆட்டோவை பேருந்துகள் இயக்க முடியாத அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் இயக்க உள்ளதாகவும் மற்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாகும் சென்னை ஒருங்கிணைந்து போக்குவரத்துக்கு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ இந்திய ரயில் பயணிகள் இனி மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டாமாம்..! Wi-Fi வசதி இலவசம்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |