Free Wifi in Railway Station in Tamil
பொதுவாக நாம் எங்கு பயணம் சென்றாலும் அதற்கு தேவையான பொருட்களை முதலில் எடுத்து வைத்து விடுவோம். அப்படி எடுத்து வைக்கும் பொருள்களில் முதல் பொருள் என்றால் அது மொபைல். அத்தகைய மொபைலில் இன்றைய காலத்தை பொறுத்த வரை அனைவரும் அதிகமாக Android மொபைல் தான் பயன்படுத்துகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் அந்த மொபைலில் ரீசார்ஜ் செய்து தான் எடுத்து செல்கின்றோம். என்ன தான் நாம் மொபைலிற்கு ரீசார்ஜ் செய்து எடுத்து சென்றாலும் கூட ரயிலில் செல்லும் போது சிலநேரத்தில் நமக்கு நெட்வொர்க் வசதி இல்லாமல் போகிவிடும். ஆகையால் இதுபோன்ற பிரச்சனை வராமல் தடுப்பதற்கும் மற்றும் பயணிகளுக்கும் உதவும் வகையிலும் ஒரு குட் நியூஸ் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன குட் நியூஸ் அதன் கீழ் யாரெல்லாம் பயன் அடையலாம் என்று விரிவாக இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ ரயில் பயணிகள் இனி நிம்மதியா தூங்கலாம்.. நியூஸ் வந்தாச்சு..
Railway Station Free Wi-Fi in Tamil:
பொதுவாக இந்திய மக்களை பொறுத்தவரை அதிகமாக மேற்கொள்ளும் பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். இதனை அடிப்படையாக வைத்து ரயில்வே துறை பயணிகள் பயன் பெரும் விதமாக நிறைய சலுகைகளை தொடர்ந்து அளித்து வருகிறது.
அதாவது மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் தள்ளுபடி மற்றும் பயணிகள் ஓய்வு அறை என்று சில திட்டங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு மொபைல் போனில் சில நேரம் நெட்வொர்க் வசதி இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆகாயல் இரயில்வே துறை ரயில் பயணிகளுக்கு இலவசமாக Wi-Fi வசதி வழங்க திட்டமிட்டு உள்ளது.
மேலும் இந்த திட்டத்தை மிகவும் விரைவாக மும்பை ரயில் நிலையத்திலும் மற்றும் சில ரயில் நிலையத்திலும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து Wi-Fi வசதி இன்னும் கொண்டுவரப்படாத ரயில் நிலையங்களில் விரைவில் Wi-Fi வசதி கொண்டுவரப்படும் என்றும் அதன் மூலமாக பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் போது இணையத்தளத்தை இலவசமாக பயன்படுத்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த வசதியானது பயணிகளிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ இனி இவர்களுக்கு எல்லாம் ரயில் கட்டணத்தில் தள்ளுபடியாம் தெரியுமா ..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |