How to Get Cylinder at rs 600 Full Details
தற்போதைய கால கட்டத்தில் கேஸ் சிலிண்டர் இல்லாதவர்கள் வீடே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை ஆகும். எளிமையாகவும், விரைவாகவும் சமையல் வேலைகளை முடிக்க வேண்டிய அவசர உலகத்தில், சுழன்று வருகின்றோம்.
நாடு முழுவதும் உள்ள வர்த்தக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சிலிண்டரின் விலை ஏற்றதால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.
அதிலும் ஏழ்மையான குடும்பத்தினர் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றன. இந்த நிலையில் தான் பிரதமர் உஜ்வலா திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி தொழிலார் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டது.
இதில் 10 கோடிக்கும் அதிகமான நுகர்வோர்கள் குறைவான விலையில் கேஸ் சிலிண்டர்களை பெற்று பயனடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இதுமட்டும் இல்லாமல் மத்திய அரசு சார்பாக 300 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கூடுதலாக 25 லட்சம் LPG இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பயனாளிகளின் 10 புள்ளி 35 கோடியாக உயரும் என கருது தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் உஜ்வலா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பது என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புதிய 500 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்கு பதில் ராமர் படமா.!
பிரதமரின் உஜ்வலா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பது?
https://www.pmuy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் Apply for PMUY Connection எனபதை கிளிக் செய்யவும்.
பிறகு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் சிலிண்டரை தேர்வு செய்து ஆவணங்களுடன் அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 600 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்க தகுதி பெற்றவர்கள் என்றால் சில நாட்களில் அதற்கான பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தஞ்சையிலிருந்து விமான சேவை தொடக்கம்..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |