ரயிலில் செல்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்துகொண்டு செல்வது மிகவும் அவசியம்..!

Advertisement

Indian Railway Rules For Sleeping in Tamil

யாருக்கெல்லாம் ரயிலில் செல்வது மிகவும் பிடிக்கும். ரயிலில் செல்வது என்றால் அவ்வளவு பிடிக்கும். ஏனென்றால் அதில் தான் அதிகளவு கூட்டம் இருக்காது. அப்படியே இருந்தால் பஸ்யில் செல்வது போல் கஷ்டம் இருக்காது. எனவே தான் ரயிலில் செல்வது மிகவும் பிடிக்கும். அதேபோல் ரயில்கள் தான் 177 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயில்களில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படி சிறப்பு பெற்ற ரயில்களில் தற்போது நிறைய ரூல்ஸ் வந்துள்ளது. அது பயனர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது என்பதாலும் இதுபோன்ற நிறைய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Train Emergency Brake:

இந்த பிரேக் அனைத்து பெட்டிகளிலும் இருக்கும். இந்த பிரேக் எதனால் உள்ளது தெரியுமா..? இது வைத்திருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதாவது முக்கியமாக சொல்லவேண்டுமென்றால் ரயிலில் ஏதாவது தீ விபத்து, ரயிலில் பயணிக்கும் குழந்தைகள், வயதானவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் ஏறும் அல்லது இறங்கும் போது திடீரெண்டு ஒருவரின் உடல்நிலை மோசம் அடைந்தாலோ மற்றும் கொள்ளையடிக்கப்பட்டாலோ அந்த நேரத்தில் இந்த சங்கிலிலை இழுத்து கொள்ளலாம்.

பர்த் விதிகள்:

 indian railway rules for sleeping in tamil

இந்திய ரயில்கள் விதிகளின் படி மிடில் பர்த் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அந்த பர்த்தில் தூங்க முடியும். இந்த நேரத்தை தவிர மற்ற நேரத்தில் தூங்கினால் நீங்கள் அதை தடுக்கலாம். கீழ் உள்ள பர்த்தில் பயணிகள் அமர்வதை போல் மடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ இனிமேல் Train Ticket Booking செய்த இடத்தில் தான் ஏறவேண்டும்..! இல்லையென்றால் உங்களுக்கு Ticket இல்லை..!

Double Stop Rules in Indian Railways:

இந்த விதிகள் எதற்காக என்றால் ஒரு பயணிகள் அதாவது ஒரு சீட்டை பதிவு செய்த பயணிகள் அந்த சீட்டில் அமரவில்லை என்றால் அந்த சீட்டு வேறு ஒரு நபருக்கு மாற்றி உடனே கொடுத்து விடுவார்கள். முன்பு பதிவு செய்த இடத்தில் ரயிலில் ஏறவில்லை என்றால் இரண்டு ஸ்டேஷனில் பார்த்துவிட்டு அதன் பின்பு தான் மாற்றி கொடுப்பார்கள்.

பயணிகளை தொந்தரவு செய்ய கூடாது:

 indian railway rules in tamil

ஒரு ரயில் பயணம் நீண்ட நேரம் இருக்கும்பட்சத்தில் பயணிகளை தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும் என்பது அவசியமானது. அதேபோல் முக்கிமாக இரவு 10 மணிக்கு மேல் பணிகளை தொந்தரவு செய்யக்கூடாது. அதாவது TTE பயணிகளை 10 மணிக்கு மேல் அவர்களின் பயணசீட்டை பரிசோதனை செய்ய கூடாது. காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் பயண சீட்டை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

Food on Train:

 indian railway rules and regulations in tamil

இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள ரயில்களில் சிற்றுண்டிகள், உணவுகள் மற்றும் பானங்கள் போன்ற தொகுக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலையை சரி பார்க்க  விலை நிர்ணயம் தொடர்பான குழு நிலையான விதிகளை வகுத்து வைத்துள்ளது. இதில் பயணிகளிடம் அதிக கட்டணம் மற்றும் தயாரிப்புகள் குறித்து தரத்துடன் இருக்கிறது என்பதை அறிந்து உரிய அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.

அதிக சத்தத்தை தவிர்க்கவும்:

 indian railway rules for sleeping in tamil

ரயில்களில் உங்களின் ஆசைக்காக பாடல் கேட்டாலோ வீடியோ பார்த்தாலோ அந்த சத்தத்தை குறைத்து கேட்கவேண்டும். அதேபோல் போனிற்கு ஏதேனும் சத்தம் ஏற்பட்டால் அதனை குறைத்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தூங்கும் போது பயணிகளுக்கு இடையூறாக இருக்க கூடாது.

இனிமேல் ரயில் நிலையத்தில் பேசக்கூடாது..! என்னப்பா சொல்லுறீங்க..!

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement