ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா..! அப்போ இனி ஜாலி தான்..!

Advertisement

Jio 40 GB Data Plan  

ஒரு போன் செயல்பட வேண்டும் என்றால் அதற்கு கட்டாயமாக சிம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. இந்த வகையில் பார்த்தோம் என்றால் ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஏர்செல் மற்றும் BSNL என பல நிறுனவங்கள் முன்பாக இருந்து வந்தது. அதில் அவர் அவருடைய இருப்பிடத்திற்கு ஏற்றவாறு அது ஏற்றதாக இருக்கிறதோ அதனை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் BSNL இந்த சிம் கார்டுகள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நூற்றில் 75% ஆனது ஜியோ சிம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஜியோ நிறுவனம் ஆனது பயனாளருக்கு என்றே நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் இப்போது மற்றொரு அறிவிப்பினையும் அறிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு என்று பதிவில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜியோ ரீசார்ஜ் பிளான்:

ஜியோ நிறுவனம் நிறைய வகையான திட்டங்களை பயனாளருக்கு என்று அறிமுகம் செய்து இருந்தாலும் கூட தனித்துவமாக இந்த ஆண்டு IPL கிரிக்கெட் ஆட்டத்தின் தொடக்கத்தில் மக்களுக்கு ஒரு ஸ்பெஷல் சலுகை அறிமுகம் செய்தது.

அதாவது அன்லிமிடெட் SMS  மற்றும் கால் வசதி, தினமும் 3ஜிபி டேட்டா வசதி இவற்றை உடன் சேர்த்து 5ஜி நன்மையினையும் அளித்து வந்தது. இதனை தொடர்ந்து 40ஜிபி டேட்டா வசதியினையும் வழங்கி வந்தது.

ஆனால் இப்போது மற்றொரு சலுகையினையும் அளித்துள்ளது. அது என்னவென்றால் 40ஜிபி டேட்டா வசதியினை 999 ரூபாய், 319 ரூபாய் மற்றும் 219 ரூபாய் என இந்த திட்டங்களிலும் கொண்டுவரப்போகிறது.

Latest News👉 இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி.. என்னனு தெரிஞ்சிக்கோங்க.. 

Jio Recharge Plan 319:

319 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டா, 100 SMS வசதியினை அளித்து வந்தது. ஆனால் இனிமேல் கூடுதல் டேட்டாவாக 6ஜிபி டேட்டா இலவசமாக 5ஜி சலுகையினை பெற்ற ஜியோ சிம் பயனாளருக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 28 நாட்களுக்கான வேலிடிட்டியாகும்.

219 Jio Plan:

ஜியோ சிம் பயன்படுத்தவருக்கான 219 ரூபாய் ரீசார்ஜ் பிளான் எப்போதும் அளிக்கும் வசதியினை அளித்தலும் கூட இப்போது கூடுதலாக ஜியோ வெல்கம் 5ஜி சலுகையினை பெற்ற ஜியோ சிம் பயனாளருக்கு இலவசமாக 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

999 Recharge Jio Plan:

ஜியோவில் உள்ள 999 ரூபாய்க்கான ரீச்சார்ஜ் பிளான் ஆனது 84 நாட்களுக்கு 100 SMS வசதி மற்றும் 3ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் சேர்த்து இப்போது ஜியோ நிறுவனம் ஆனது 40ஜிபி டேட்டாவை 241 ரூபாயிலான வசதியினை குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்கிறது.

மேலும் ஜியோ நிறுவனம் ஆனது Special Prepaid Mobile Base Plans உடன் சேர்த்து கிரிக்கெட் டேட்டா ஆட்-ஆன் பிளான்ஸ்களையும் வழங்க இருக்கிறது. ஆகவே 222 ரூபாய் டேட்டா ஆட்-ஆன் பிளான் யூஸர்களுக்கு 50GB டேட்டாவை ஆக்டிவ் பிளான் காலாவதியாகும் வரையும், 444 ரூபாய்க்கான பிளானிற்கு கூடுதலாக 60 நாட்களுக்கு 100ஜிபி டேட்டாவையும் மற்றும் ரூ.667 பிளான் 150GB டேட்டாவை 90 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டுடன் வழங்குகிறது

Latest News👉👉 பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகம்..  கூகுள் நிறுவனம் கூறுவது என்ன.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement