மைக்ரோசாப்ட் Copilot Pro பிரீமியம் மாதாந்திர சலுகையை அறிமுகம் செய்துள்ளது..

Advertisement

Microsoft Launches Copilot Pro Monthly Subscription

அணைத்து வேலைகளிலும் எளிதாக்கும் வகையில் அனைத்திலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்மார்ட் போன் முதல் நாம் பயன்படுத்தும் அணைத்து Software -களிலும் பல்வேறு AI தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டு துல்லியமான செயல்திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் Microsoft நிறுவனம் தனது AI-இயங்கும் Copilot பிரீமியம் பதிப்பை மாதாந்திர சலுகை முறையில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் மாதாந்திர சந்தாவினை பெறுவதன் AI -யின் பல்வேறு அம்சங்களை Microsoft-யில் பயன்படுத்தி கொள்ள முடிகிறது. ஓகே வாருங்கள், அதனை பற்றி விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

Microsoft Copilot Pro Subscription:

Microsoft Copilot Pro Subscription

மைக்ரோசாப்ட் திங்களன்று தனது AI-இயங்கும் Copilot பிரீமியம் பதிப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. Microsoft 365 தனிப்பட்ட மற்றும் குடும்ப சந்தாதாரர்கள் PC, Mac மற்றும் iPad இல் Word, Excel, PowerPoint, Outlook மற்றும் OneNote ஆகியவற்றில் Copilot Pro ஐப் பயன்படுத்த முடியும். மைக்ரோசாப்டின் கூற்றுப்படி, Copilot Pro பயனர்கள் OpenAI இன் GPT-4 டர்போ மாடலை அணுகலாம் மற்றும் விரைவில், AI மாடல்களுக்கு இடையே விருப்பத்தின் அடிப்படையில் மாறுவதற்கான வசதியும் உள்ளது.

Copilot Pro மாதாந்திர சந்தா விலை:

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை இந்தியாவில் விலையை அறிவிக்கவில்லை. எனினும், Copilot, Copilot Pro க்கான மைக்ரோசாப்டின் புதிய பிரீமியம் சந்தா சேவையானது, ஒரு பயனருக்கு மாதத்திற்கு $20 என கூறப்படுகிறது.

புதிய 500 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்கு பதில் ராமர் படமா.!

Copilot Pro அம்சங்கள்:

AI-இயங்கும் Copilot மூலம் உங்களுக்குத் தேவைப்படும்போது சரியான திறன்களை முறையாக உருவாக்கிக்கொள்ள முடியும்.

Microsoft 365 தனிப்பட்ட மற்றும் குடும்ப சந்தாதாரர்களுக்கான PC, Mac மற்றும் iPad இல் Word, Excel[i], PowerPoint, Outlook மற்றும் OneNote இல் Copilotக்கான Access பெற முடியும்.

Copilot Pro மூலம், வேகமான செயல்திறனுக்காக, பீக் நேரங்களில் GPT-4 Turboக்கான Access பெற முடியும்.

மைக்ரோசாப்டின் புதிய பிரீமியம் சந்தா சேவையை நீங்கள் பெறுவதன் மூலம் உங்கள் வேலையை எளிதாகவும் வேகமாகவும் முறையான அமைப்புடனும் செய்து முடிக்க உதவுகிறது.

Copilot மொபைல் பயன்பாடு இப்போது Android மற்றும் iOS க்கு கிடைக்கிறது. மேலும், மைக்ரோசாஃப்ட் அகௌண்ட் வைத்திருக்கும் நபர்களுக்காக ஆண்ட்ராய்டு மற்றும் iOS – க்கான மைக்ரோசாஃப்ட் 360 மொபைல் பயன்பாட்டில் கோபிலட் சேர்க்கப்படுகிறது.

தஞ்சையிலிருந்து விமான சேவை தொடக்கம்..

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement