ஏப்ரல் 1 முதல் இதற்கு எல்லாம் கட்டணம் உயர்த்தப்படுமாம்..! உங்களுக்கு இன்னும் தெரியாதா..!

petrol diesel price lpg gas cylinder rules from april 1 in tamil

ஏப்ரல் முதல் புதிய மாற்றங்கள்

ஏப்ரல் மாதம் வருவதற்கு இன்னும் 1 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த ஏப்ரல் மாதம் முதல் பழைய கணக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு புதிய கணக்குகள் தொடங்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான ஏப்ரல் மாதத்தில் புதிய மாற்றங்கள் வரப்போவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் புதிய வாகனம் வாங்குதல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை என அனைத்திலும் நிறைய மாற்றங்கள் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அப்படி என்னென்னெ மாற்றங்கள் இந்த வருடத்தில் வரப்போகிறது என்ற முழு தகவலையும் இந்த News பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டு தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் அட்டை வைத்து இருப்பர்வர்களுக்கு இனி இதுவும் இலவசமாம்.. அரசு அறிவித்த புதிய அறிவிப்பு தெரியாதா.. 

ஏப்ரல் மாதத்தில் புதிய விதிகள்:

இன்றைய காலத்தை பொறுத்தவரை அனைவருடைய வீட்டிலும் பெரும்பாலும் கேஸ் அடுப்பு தான் உபயோகப்படுத்தப்படுகிறது. அத்தகைய கேஸ் அடுப்பிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டரின் விலையினை சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயிக்கிறது. ஆகையால் இந்த ஏப்ரல் மாதம் முதல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் கடந்த 312 நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டிப்பாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.

பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இதுநாள் வரையிலும் செலுத்திய கட்டண தொகை இனி அப்படியே இருக்காது என்றும் அதற்கு பதிலாக ஐந்து To பத்து விழுக்காடு வரை அதிகமான கட்டண தொகை செலுத்த வேண்டும் என்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா, ஹீரோ, டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுஜுகி போன்ற பெரிய கார் நிறுவனங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் காரின் விலையில் 2% முதல் 5% வரை உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறது.

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தவர்கள் உங்களுக்கான நாமினியை இந்த வருடத்திற்குள் நியமனம் செய்ய வேண்டும்.

ஒரு நபர் புதிதாக இப்போது ஒரு அலுவலகத்தில் வேலை செய்ய போகிறார் என்றால் பழைய அலுவகத்தில் உள்ள 12B படிவத்தினை இப்போது கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்த வருடத்தில் அதிக வருமான வரி மற்றும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வரும் என்றும் கூறப்படுகிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள விதிகள் அனைத்திலும் ஏப்ரல் மாதம் முதல் விரைவில் அமலுக்கு வரலாம் என்று சொல்லபடுகிறது.

இதையும் படியுங்கள்⇒ பான், ஆதார் வைத்திருப்பவர்கள் இதை முக்கியம் தெரிந்துகொள்ளுங்கள்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil