இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது மற்றும் அதன் தேதி, நேரம் இதோ..!

Advertisement

சூரிய கிரகணம் 2023 எப்போது மற்றும் அதன் நேரம் | Surya Grahan 2023 Date and Time in Tamil

பொதுவாக ஆண்டுதோறும் 4 கிரகணம் நிகழும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தினை ‘நிங்கலூ சூரிய கிரகணம்’ அல்லது ‘கலப்பின சூரிய கிரகணம்’ என்று அழைக்கப்படுகிறது. சரி வாங்க இந்த 2023-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்பொழுது வருகிறது என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சூரிய கிரகணம் 2023 எப்போது? | Surya Grahan 2023 Date and Time in Tamil

2023 ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20, 2023 அன்று நிகழ இருக்கிறது.

நேரம்:

இந்து சூரிய கிரகணம் காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை தொடரும். விஞ்ஞானிகள் கூற்றின்படி, இது ஒரு முழு சூரிய கிரகணத்தின் உச்சம் சுமார் 7 ​​நிமிடங்கள் மற்றும் 32 வினாடிகள் நீடிக்கலாம் என்று கணித்துள்ளனர். அதிகபட்சமாக 12 நிமிடங்கள் மற்றும் 29 வினாடிகள் கூட நீடிக்கலாம்.

இதனால் உலகம் 7.32 நிமிடங்கள் இருள் சூழ்திருக்கலாம் என்று கருதுகின்றனர். பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் சூரிய கிரகணம் கூறுகின்றனர். இந்த நிகழ்வின்போது, நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?

இந்த சூரிய கிரகணத்தை தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அண்டார்டிக்காவில் உள்ளவர்களால் பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் காணப்படாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதார் அட்டை வைத்துருப்பவர்களுக்கு இலவச வாய்ப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது..! இதற்கான கடைசி தேதி ஜூன் 15..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement