ட்ரைவர் இல்லாத பஸ் விரைவில் அறிமுகம்..! இந்த நியூஸ் தெரியுமா உங்களுக்கு..!

Advertisement

World’s First Driverless Bus in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் மூலம் தினமும் பல பயனுள்ள செய்திகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உலகின் முதல் ட்ரைவர் இல்லாமல் செல்லக்கூடிய பேருந்து பயன்பாட்டுக்கு வரவுள்ளது அவற்றின் விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம். பேருந்து என்பது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். பேருந்து என்பது ஒன்று இல்லாவிட்டால் பலபேரின் வாழ்க்கை முடங்கிவிடும். அந்த வகையில் இப்போது ட்ரைவர் இல்லாத பேருந்து ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளார்கள். ஓகே வாருங்கள் நண்பர்களே உலகின் முதன் ட்ரைவர் இல்லாத பஸ் எங்கு எப்போது வரவிருக்கிறது என்பதனை இப்பதிவில் பார்க்கலாம்.

உலகின் முதல் பணக்கார நாடு எது..?

 

The World First Driverless Bus Service Has Started in Which Country in Tamil:

The World First Driverless Bus Service Has Started in Which Country in Tamil

 உலகின் முதன் முறையாக ட்ரைவர் இல்லாத பேருந்து ஸ்காட்லாந்தில் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. தொழிநுட்ப வளர்ச்சியில் வாகனங்கள் இல்லாத பேருந்து கவனம் பெற்று வருகிறது.

அந்த வகையில் ட்ரைவர் இல்லாத கார்கள் சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.  இப்போது முதன் முறையாக ஸ்காட்லாந்தில் ட்ரைவர் இல்லா பேருந்து அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.   இப்பேருந்தில் 33 நபர்கள் பயணம் செய்யும் வகையிலான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் எடின்பர்க் மற்றும் பைஃப் இடையே 14 மைல் தொலைவில் இந்த சேவை தொடங்க இருக்கிறது. 

இப்பேருந்தில் பயணிகள் ஏற, இறங்க உதவுவதற்கு மற்றும் தொழில்நுட்ப செயல்பாட்டை கவனிப்பதற்கு இரு பணியாளர்கள் இருப்பார்கள் என அந்நாட்டு போக்குவரத்துக்கு துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரைவர் இல்லாத பேருந்து சேவையால், மனித தவறால் நேரிடும் 90 சதவீத விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது வேற கலர் இல்லை என்று தெரியுமா.?

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement