தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் பற்றிய தகவல்..!

Advertisement

Jeyamohan History in Tamil

நமது தமிழ் மொழியில் பல சிறந்த புத்தகங்கள் உள்ளன. அவற்றை எழுதிய பல சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களுள் மக்களின் கவனத்தை ஈர்த்த பல புதினங்களை எழுதிய தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் பற்றிய தகவல்களை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதாவது இவரின் வாழக்கை வரலாறு மற்றும் இவரின் படைப்புகள் போன்ற தகவல்களை தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்=> கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Novel Writer Jeyamohan History in Tamil:

Novel Writer Jeyamohan History in Tamil

ஜெயமோகன் ஏப்ரல் 22-ம் தேதி 1962-ஆம் ஆண்டு குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு என்னும் ஊரில் பிறந்தார். இவரின் பெற்றோர் தந்தை எஸ்.பாகுலேயன் பிள்ளை மற்றும் தயார் பி. விசாலாட்சி அம்மா ஆவார்கள்.

இவர் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். இவர் மிகப் பரவலாக மக்களின் கவனத்தை ஈர்த்த பல புதினங்களை எழுதியுள்ளார்.

படைப்புகள்: 

இவர் பல திரைப்பட திரைக்கதைகள், புதினங்கள், சிறுகதை நூல்கள், அரசியல் மற்றும் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்=> முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்

திரைப்படங்கள்:

  1. கஸ்தூரி மான் 
  2. நான் கடவுள் 
  3. அங்காடித் தெரு 
  4. நீர்ப்பறவை 
  5. ஒழிமுறி 012
  6. கடல் 
  7. 6 மெழுகுவத்திகள் 
  8. காஞ்சி 
  9. காவியத் தலைவன் 
  10. நாக்குபெண்டா நாக்கு டாக்கு 
  11. ஒன் பை டூ 
  12. பாபநாசம் 
  13. சர்கார் 
  14. 2.0 
  15. இந்தியன் 2 
  16. பொன்னியின் செல்வன்
  17. வெந்து தணிந்தது காடு 
  18. நதிகளில் நீராடும் சூரியன் 
  19. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 
  20. சித்தியின் டைரி
  21. இடிமுழக்கம் 

புதினங்கள்:

  1. ரப்பர்
  2. விஷ்ணுபுரம் 
  3. பின் தொடரும் நிழலின் குரல்
  4. பனிமனிதன் 
  5. கன்னியாகுமரி
  6. கொற்றவை 
  7. காடு
  8. ஏழாம் உலகம்
  9. அனல்காற்று
  10. இரவு
  11. உலோகம்
  12. கன்னிநிலம்
  13. வெள்ளையானை
  14. அந்த முகில் இந்த முகில்
  15. கதாநாயகி
  16. குமரித்துறைவி
  17. உடையாள் 
  18. வெள்ளி நிலம் 
  19. நான்காவது கொலை
  20. வெண்முரசு 

இதையும் படியுங்கள்=> குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்

சிறுகதை நூல்கள்:

  1. மண் 
  2. ஆயிரங்கால் மண்டபம் 
  3. திசைகளின் நடுவே 
  4. கூந்தல் 
  5. ஜெயமோகன் சிறுகதைகள்
  6. ஜெயமோகன் குறுநாவல்கள் 
  7. பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும்(நிழல்வெளிக்கதைகள்) (நவீனத்திகில்கதைகள்) 
  8. ஊமைச்செந்நாய் 
  9. அறம் 
  10. வெண்கடல் 
  11. ஈராறுகால்கொண்டெழும்புரவி 
  12. பிரதமன்
  13. பத்து லட்சம் காலடிகள்
  14. குகை
  15. ஆயிரம் ஊற்றுகள்
  16. மலை பூத்தபோது
  17. தேவி
  18. எழுகதிர்
  19. ஐந்து நெருப்புகள்
  20. முதுநாவல்
  21. தங்கப்புத்தகம்
  22. ஆனையில்லா!
  23. பொலிவதும் கலைவதும்
  24. வான் நெசவு
  25. இரு கலைஞர்கள்
  26. விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) (கிழக்கு பதிப்பகம்)
  27. துளிக் கனவு

இதையும் படியுங்கள்=> தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதையை எழுதிய நாஞ்சில் நாடன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

அரசியல் நூல்கள்:

  1. சாட்சிமொழி 
  2. இன்றைய காந்தி 
  3. அண்ணா ஹசாரே 
  4. உரையாடும் காந்தி 
  5. ஜனநாயகச் சோதனைச்சாலையில்
  6. வலசைப்பறவை

வாழ்க்கை வரலாறு நூல்கள்:

  1. முன்சுவடுகள் 
  2. கமண்டலநதி நாஞ்சில் நாடன் 
  3. கடைத்தெருவின் கலைஞன் ஆ. மாதவன் 
  4. நினைவின் நதியில்
  5. பூக்கும் கருவேலம் 
  6. லோகி 
  7. இவர்கள் இருந்தார்கள் 
  8. ஒளியாலானது
  9. தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்
  10. ஞானி

இதையும் படியுங்கள்=> தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பற்றிய சில குறிப்புகள்

விருதுகள்:

  1. 1990- ஆம் ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார்.
  2. 1992- ஆம் ஆண்டுக்கான கதா விருதைப் பெற்றார்.
  3. 1994- ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது பெற்றுள்ளார்.
  4. 2008- ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார்.
  5. 2010- ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது.
  6. 2011- ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார்.
  7. 2012- சிறந்த திரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது ஒழிமுறி.
  8. 2012- சிறந்த திரைக்கதைக்கான டீ ஏ ஷாஹித் விருது ஒழிமுறி.
  9. 2014- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement