குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்..!

Advertisement

Novel Writer Indhira Parththasarathi History in Tamil 

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில தகவல்களை தான் பார்க்க இருக்கின்றோம். நம்மில் பலருக்கும் குருதிப்புனல் என்ற நாவல் பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதனை எழுதிய இந்திரா பார்த்தசாரதி பற்றி தெரிந்திருக்காது. இன்றைய பதிவில் அவரின் வாழ்க்கை  வரலாறு, அவரின் படைப்புகள் மற்றும் அவர் பெற்ற விருதுகள் பற்றியெல்லாம் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவரை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

 கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Life History of Indira Parthasarathy in Tamil:

Indira parthasarathy in tamil

இந்திரா பார்த்தசாரதி ஜூலை 10,1930 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.

கல்வி:

இவர் தனது பள்ளி படிப்பை கும்பகோணத்தில் நிறைவுசெய்தார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பணிகள்:

இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கர்தாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் நிகழ்கலைத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவர் முதலில் ஆனந்த விகடன் (வார இதழ்களில்) எழுதத் தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களிலும் எழுதிவந்தார்.

படைப்புகள்:

இவர் 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புகள் படைத்துள்ளார். சில நாடகங்களும் படைத்துள்ளார். அதில் ‘மழை’ என்னும் நாடகம்தான் இவர் படைத்த முதல் நாடகம் ஆகும்.

இவர் எழுதிய நிலம் என்னும் நல்லாள் என்னும் நாவலை நண்பர் ஒருவர் நாடகமாக எழுதச்சொன்னதால் நாடகமாக எழுதினார். பிற்காலத்தில் இவர் எழுதிய “நந்தன் கதை”, ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், “ஏசுவின் தோழர்கள்” போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்

நாடக நூல்கள்:

  1. மழை
  2. போர்வை போர்த்திய உடல்கள்
  3. காலயந்திரங்கள்
  4. நந்தன் கதை
  5. ஒளரங்கசீப்
  6. ராமானுஜர்
  7. கொங்கைத்தீ
  8. பசி
  9. புனரபி ஜனனம் புனரபி மரணம்
  10. தர்மம்
  11. கோயில்
  12. இறுதியாட்டம் – சேச்சுபியர் எழுதிய கிங் லியர் நாடகத்தின் தமிழாக்கம்
  13. புயல் – சேச்சுபியர் எழுதிய டெம்பஸ்ட் நாடகத்தின் தமிழாக்கம்
  14. இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (இரு தொகுப்புகள்)

புதினங்கள்:

  1. அக்னி
  2. ஆகாசத்தாமரை (1991 – கல்கி இதழில் வெளிவந்த தொடர்)
  3. ஏசுவின் தோழர்கள்
  4. காலவெள்ளம்
  5. கிருஷ்ணா கிருஷ்ணா
  6. குருதிப்புனல்; 1975; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை(வெளியிட்டது)
  7. சத்திய சோதனை
  8. சுதந்தர பூமி
  9. தந்திர பூமி
  10. திரைகளுக்கு அப்பால்
  11. தீவுகள்
  12. மாயமான் வேட்டை
  13. வெந்து தணிந்த காடுகள்
  14. வேதபுரத்து வியாபாரிகள்
  15. வேர்ப்பற்று
  16. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன

சிறுகதைத் தொகுப்புகள்:

  1. நாசகாரக்கும்பல்
  2. மனித தெய்வங்கள்; 1967 திசம்பர்; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை(வெளியிட்டப்பட்டது)
  3. முத்துக்கள் பத்து: இந்திரா பார்த்தசாரதி; அம்ருதா பதிப்பகம், சென்னை(வெளியிட்டது)

சிறுகதைகள்:

  1. தீர்ப்பு
  2. நட்பு
  3. நம்பிக்கை
  4. அற்றதுபற்றெனில்
  5. நாயகன்
  6. பயணம்
  7. சுமைகள்
  8. ஓர் இனிய மாலைப்பொழுது
  9. மனிதாபிமானம்
  10. பதி பசி பாசம்
  11. ஒரு கப் காப்பி
  12. பஞ்ச் லைன்
  13. அணில்
  14. வழிபாடு
  15. கருகத்திருவுளமோ
  16. யக்ஞம்

கட்டுரைத் தொகுதிகள்:

  1. இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் (முதல் பதிப்பு 2013)
  2. கடலில் ஒரு துளி (தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம்,
  3. அரசியல்-சமூகம், நாடகம் என ஐந்து தலைப்புகளில் மொத்தமாக 42 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.)
  4. தமிழிலக்கியத்தில் வைணவம் – முனைவர் பட்ட ஆய்வேடு

மொழிபெயர்ப்புகள்:

  1. Ashes and Wisdom
  2. Wings in the Void
  3. Into this Heaven of Freedom

விருதுகள்:

  1. 1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
  2. சரஸ்வதி சம்மான்
  3. பாரதீய பாஷா பரிஷத்
  4. 2010-ல் பத்ம ஸ்ரீ விருது.

நந்திமலைச்சாரலிலே சிறுகதையின் எழுத்தாளர் அம்பை பற்றிய தகவல்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement