தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பற்றிய சில குறிப்புகள்..!

Advertisement

Novel Writer Perumal Murugan Biography in Tamil

நமது தமிழ் மொழியில் பல்லாயிரக்கணக்கான நல்ல கருத்துக்களை கூறியுள்ள புத்தகங்கள் உள்ளது. அப்படி நல்ல நல்ல கருத்துக்களை கூறக்கூடிய புத்தகங்களை எழுதிய பல தமிழ் எழுத்தாளர்களை பற்றிய தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அப்படி உங்களுக்கும் தெரியவில்லை என்றால் பரவாயில்லை.

அதனால் தான் நமது பொதுநலம்.காமில் தினமும் ஒரு தமிழ் எழுத்தாளர் பற்றிய தகவல்கள் கூறப்படுகிறது. அந்தவகையில் இன்றைய பதிவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய படைப்புகள் பற்றியும் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.

Perumal Murugan Life History in Tamil:

Perumal murugan life history in tamil

பெருமாள்முருகன் 1966- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் பெருமாள் தாயாரின் பெயர் பெருமாயி ஆகும்.

இதையும் படியுங்கள்=> கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இவரது இயற்பெயர் முருகன் ஆகும். இவர் தனது தந்தையின் பெயருடன் தனது பெயரை இணைத்து ”பெருமாள் முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார்.

மேலும் இவர் இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும், மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் மற்றும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன.

மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது பெரும்பாலான நாவல்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இவர் அகராதியியல், பதிப்பியல் போன்ற துறைகளில் மிகவும் ஆர்வமுடையவர். அதனால் அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்=> முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்

கல்வி மற்றும் பணி:

இவர் தமிழ் வட்டார நாவலின் முன்னோடியான எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றித் தற்போது அரசு கல்லூரி முதல்வராக உள்ளார். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

படைப்புகள்:

இவர் பல நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், அகராதி, கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் போன்ற பல படைப்புகளை இயற்றியுள்ளார்.

இதையும் படியுங்கள்=> குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்

நாவல்கள்:

  1. ஏறுவெயில்
  2. நிழல்முற்றம்
  3. கூளமாதாரி
  4. கங்கணம்
  5. மாதொருபாகன்
  6. ஆளண்டாப்பட்சி
  7. பூக்குழி
  8. ஆலவாயன்
  9. அர்த்தநாரி
  10. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
  11. கழிமுகம்

சிறுகதைத் தொகுப்புகள்:

  1. திருச்செங்கோடு
  2. நீர் விளையாட்டு
  3. பீக்கதைகள்
  4. வேப்பெண்ணெய்க் கலயம்
  5. பெருமாள்முருகன் சிறுகதைகள்
  6. மாயம்

கவிதைத் தொகுப்புகள்:

  1. நிகழ் உறவு
  2. கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்
  3. நீர் மிதக்கும் கண்கள்
  4. வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்
  5. கோழையின் பாடல்கள்
  6. மயானத்தில் நிற்கும் மரம்

அகராதி:

  1. கொங்கு வட்டாரச் சொல்லகராதி

கட்டுரைகள்:

  1. ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை
  2. துயரமும் துயர நிமித்தமும்
  3. கரித்தாள் தெரியவில்லையா தம்பி
  4. பதிப்புகள் மறுபதிப்புகள்
  5. கெட்ட வார்த்தை பேசுவோம்
  6. வான்குருவியின் கூடு
  7. நிழல்முற்றத்து நினைவுகள்
  8. சகாயம் செய்த சகாயம்
  9. நிலமும் நிழலும்
  10. தோன்றாத்துணை
  11. மனதில் நிற்கும் மாணவர்கள்

இதையும் படியுங்கள்=> தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதையை எழுதிய நாஞ்சில் நாடன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

தொகுப்பாசிரியர்:

  1. பிரம்மாண்டமும் ஒச்சமும்
  2. உடைந்த மனோரதங்கள்
  3. சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
  4. கொங்குச் சிறுகதைகள்
  5. தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
  6. உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
  7. தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா )

விருதுகள்:

  1. சமான்வே பாஷா சம்மான்
  2. விளக்கு விருது
  3. கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது
  4. கதா விருது
  5. கனடா இலக்கியத் தோட்ட விருது – அபுனைவுப் பிரிவு
  6. சிகேகே அறக்கட்டளை விருது
  7. அமுதன் அடிகள் விருது
  8. மணல் வீடு விருது
  9. களம் விருது
  10. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  11. லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது
  12. தேவமகள் விருது
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement