Appa Missing Quotes in Tamil
இந்த உலகில் நாம் உருவாகி நன்கு வளர்ந்து நமது வாழ்க்கையை நிம்மதியாக வளர்வதற்கு உதவுவது மற்றும் நினைப்பது இரண்டு ஜீவன்கள் என்றால் அது நமது தாய் மற்றும் தந்தை தான். அப்படி நமது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான தாய் மற்றும் தந்தை இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் நமது வாழ்க்கை மிக மிக கஷ்டம் நிறைந்ததாக மாறிவிடும். அதிலும் குறிப்பாக நமது தந்தை நம்மைவிட்டுவிட்டு சென்றால் அல்லது நம்மை தூரத்தில் இருந்தால் நமது வாழ்க்கை முழுமை அடையாமல் மிகவும் கடினமாக இருக்கும்.
இந்த துயரத்தை அனுபவிக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தான் அதன் வலி புரியும். இந்த உலகில் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு என்றால் அது அப்பாவின் இழப்பு தான். அதனால் தான் இன்றைய பதிவில் அப்பா பிரிவு கவிதைகளை பதிவிட்டுள்ளோம். இவை உங்களுக்கு சிறிதளவு ஆறுதலை அளிக்கும் என்று நம்புகின்றோம்..
Appa Missing Quotes Tamil:
உலகத்தில் எத்தனை
சொந்தங்கள் இருந்தாலும்
என் கண்கள் தேடுவது
அப்பாவை மட்டுமே..
Appa Missing Quotes:
எத்தனை பேர் நான்
இருக்கிறேன் என்றாலும்..
அப்பாவை போல
யாராலும் இருக்க முடியாது..
Appa Death Quotes in Tamil:
இருக்கும் போது
கற்று தந்ததைவிட..
இறந்த பிறகு அதிகமாய்
கற்றுத்தந்த ஜீவன்..
அப்பா மட்டுமே..!
https://www.pothunalam.com/wp-content/uploads/2024/01/Appa-Death-Quotes-in-Tamil-scaled.jpg
Miss You Appa Quotes in Tamil:
என் வாழ்க்கையில்
அதிகம் அழைக்க
ஆசைப்பட்ட வார்த்தை அப்பா..
அதிகம் அழைக்க முடியாமல்
போன வார்த்தையும்
அப்பா..!
அக்கா தம்பி பாசம் பற்றிய கவிதைகள்
Miss You Appa Kavithai in Tamil:
ஆயிரம் பேர் என்
அருகில் இருந்தாலும்..
அப்பாவின்
அன்பிற்கு ஈடாக
இங்கு ஒருவரும் இல்லை..
அம்மாவை நினைத்து ஏங்கும் கவிதை வரிகள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |