தாய்மாமன் பற்றிய கவிதைகள்
வணக்கம் நண்பர்களே. பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே. இன்று நம் பதிவில் தாய்மாமன் கவிதைகளை பற்றி தான் பார்க்கப்போகிறோம். தாய்மாமன் என்பவர் தாயுடன் பிறந்தவர். உடன் பிறந்தவளுக்காக மட்டுமல்லாமல் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளுக்காகவும் காலம் முழுவதும் சீர் செய்யும் உறவு தாய்மாமன் மட்டுமே. நம்மை சுற்றி எத்தனையோ உறவுகள் இருக்கலாம் ஆனால் பெயரிலே தாயை சுமந்து நிற்கும் உறவு தாய்மாமன் உறவு மட்டுமே… இன்று நம் பதிவில் தாய்மாமன் பற்றிய கவிதைகளை பார்ப்போம்.
தாய்மாமன் கவிதைகள்:
தாயின் உத்திரத்தில்
கலந்த மறு உறவே…
தடுக்கி விழுந்தாலும்
தாங்கி பிடிக்கும் உறவே…
…தாய்மாமன் உறவு…
தாய்மாமன் கவிதை வரிகள்:
தாய்மையை போற்றும்
கலாச்சாரத்தில்
தாய் என்ற
அடைமொழியுடன்
அழைக்கப்படும்
ஒரே உறவு
…தாய்மாமன்…
தாய்மாமன் பற்றிய கவிதைகள்:
எவ்வளவு கஷ்டமாக
இருந்தாலும்
என்ன மாப்ள
என்ற வார்த்தையில்
தூக்கிவிடும் அன்பு
..தாய்மாமன் மட்டுமே..
அம்மா கவிதைகள் |
அப்பா கவிதை |
தாய்மாமன் கவிதை பற்றிய வரிகள்:
சொல்லிக் கொடுப்பதில்
தந்தையாகவும் …
தோல் கொடுப்பதில்
தோழனாகவும்…
இருக்கும் உறவு
..தாய்மாமன் உறவு..
மட்டுமே…
Thaimaman Kavithai in Tamil:
தாயின்
அன்பையும்…
தந்தையின்
அரவணைப்பையும்…
ஒன்றாக
கொடுக்கும் உறவு
..தாய்மாமன்..
மட்டுமே…
Thaimaman Quotes in Tamil:
தாயை போல் ஒரு
உறவடி அது
“தாய் மாமன்” உறவடி…..
தாயின் அன்பும்
தந்தையின் அக்கரையும்
சேர்ந்ததொரு பந்தமடி….
தந்தையாய் நின்று
தன் தங்கையை காப்பான்
குமரியாய் வளர்ந்திட
அவளுக்கு மணம் முடித்து
மகிழ்வான்…..
குழந்தை என நினைத்தவள்
ஒரு குழந்தையை
ஈன்று எடுக்க
தொட்டில் சேலையுடன்
வெளியே நிற்பானடி…
வெள்ளி சங்குடன்
தங்க கொலுசு மின்ன
காத்திருப்பானடி
தன் குட்டி மருமகளுக்காக…..
தாய்மாமன் பெருமை தாய்மாமன் கவிதை:
நான் பிறந்து கிடந்த நேரம்
மருத்துவமனையிலும் பின்னும்
பலரின் மத்தியில் ஒரு நிழல்
வெளி வராந்தாவில் இருந்து
எல்லா ஓடியாடும் வேலைசெய்து
வீட்டுக்கு அழைத்து செல்ல உதவுவார்
சட்டி பானை தொடும் விழா
பேரை காதில் சொல்லும் போது
கேட்டு மனதில் பதித்தேன்
ஒன்றாம் பிறந்த நாள் விழா
முடியெடுக்க அழுது ஆர்பாட்டம்
செய்ய ஒரு மடி கிடைத்தது
முதல்நாள் பள்ளிக்கு செல்லும்
நேரம் முதல் பலகை பல்பம்
வாங்கிகொடுத்து அழைத்து சென்றார்
நல்ல நாள் தீய நாள் என்றில்லாமல்
பல நாட்கள் நான் நிறைய முறை
பார்த்து மனதில் பதிந்த முகம்
மணவடையில் அமர்ந்து சடங்குகள்
செய்ய துணி கொடுக்க சமையல் கூடத்தில்
இருந்து அழைத்து வந்த மனிதர்
எங்களுக்கு குழந்தை பிறக்க
கருகுமணி காப்பு வாங்கிவந்து
பெருமை உரிமை கொண்ட மனிதர்
ஈம காரியங்களில் நான்
ஈடுபடும் நேரம் கூட சாய
சமாளிக்க ஒரு சொந்தம்
தாய்மாமன் எனும் பந்தம்
தாய் தந்தையருக்கு அடுத்த
நிலையில் அருமையான சொந்தம்
வாழும் வாழ்க்கையில் என்றும்
எப்பொழுதும் அறிய பொக்கிஷம்
தாய்மாமன் எனும் தொந்தம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |