வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தன்னம்பிக்கை தரும் கவிதைகள் | Self Confidence Quotes in Tamil

Updated On: February 20, 2025 3:39 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Self Confidence Quotes

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் பதிவாக இருக்கும். இந்த உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்குமே ஏதாவது ஒரு மனக்கஷ்டம் இருக்கும். இந்த உலகில் யாரும் கடைசி வரை சந்தோசத்தை மட்டும் அனுபவித்தது கிடையாது, அதேபோல யாரும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தது கிடையாது. அதனால் எந்தவொரு கஷ்டம் வந்தாலும் அதை பார்த்து பயந்து ஓடாமல் அதை நம் தன்னம்பிக்கையால் வென்று காட்ட வேண்டும். அதனால் இந்த பதிவின் வாயிலாக தன்னம்பிக்கை தரும் கவிதைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

தன்னம்பிக்கை பொன்மொழிகள்..!

Self Confidence Kavithai in Tamil:

பணத்தால் சாதிக்க முடியாததை கூட முயற்சியால் சாதித்து காட்ட முடியும்.

சாதிக்கனும் என்று ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

உன் விடாமுயற்சியால் சுமைகளைக் கண்டு துவண்டு விடாதே. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்.

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.

வெற்றி துவக்கமும் அல்ல. தோல்வி முடிவும் அல்ல. முயற்சி ஒன்றே அதை முடிவு செய்யும்.

தன்னம்பிக்கை தரும் கவிதைகள்: 

விதைகள் கீழ்நோக்கி
எறியப்பட்டால் தான்
விருட்சங்கள் மேல்நோக்கி
வளரும்..! அதனால்
விழும்போது
விதையென விழு
எழும்போது விருட்சமாய் எழு..!

 self confidence quotes in tamil

தன்னம்பிக்கை கவிதைகள்: 

வாழ்க்கையில் இழந்த
அனைத்தையும் மீட்டு
விடலாம்
தன்னம்பிக்கையை இழக்காமல்
இருந்தால்..!

Confidence Quotes

சிறந்த தமிழ் Motivational Quotes Collection..! 

Self Confidence Thannambikkai Kavithaigal in Tamil:

துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும். துணிந்து பார் வாழ்க்கை வழிகாட்டும்.

துணிந்து கால் வை. போராட்டம் என்று தெரிந்தாலும் துணிந்து போராடு. காலம் உன் கைப்பிடியில். வெற்றி உன் காலடியில்.

ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்து விடலாம் ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.

தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே நீ தனியாக போராடுவதே வெற்றிதான்.

நீங்கள் தனியாக பயணம் செய்ய வேண்டும். அந்தப் பயணத்தில் நீங்களே உங்கள் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்க வேண்டும்.

Confidence Quotes in Tamil:

நம்பிக்கை இழந்தவன்
வெல்வது கடினம்
தன்னம்பிக்கையோடு இருப்பவன்
வீழ்வது கடினம்..!

Confidence Quotes in Tamil

தன்னம்பிக்கை தரும் கவிதைகள்: 

காயங்கள் இல்லாமல்
கனவுகள் காணலாம்..!
ஆனால் வலிகள்
இல்லாமல் வாழ்க்கையை
வெல்ல முடியாது..!

Self Confidence Quotes

 

தன்னம்பிக்கை கதைகள்

Self Confidence Quotes Tamil:

தனியாக போராடுகிறேன்
வெற்றி கிடைக்குமா
என்று வருந்தாதே..!
நீ தனியாக
போராடுவதே வெற்றி தான்..!

Self Confidence Quotes Tamil

Self Confident Quotes in Tamil:

பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று.

வானவில் தோன்றும்போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகிறது.

எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம்தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது

பலம் கொண்ட உடலை விட தன்னம்பிக்கை கொண்ட மனமே சிறந்தது.

வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பின்னும் அதை இன்னும் ஒரு முறை முயற்சிப்பது.

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now