10 நிமிடத்தில் கத்தரிக்காயில் இப்படி ஒரு டிஷ் செய்யலாமா.! இந்த டிஸ்ஸை இனிமேலாவது தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி.?

காரமாக சாப்பிடுபவர்கள் வறுவலை வேண்டுமென்றே சொல்ல மாட்டார்கள். காய்கறிகளில் பல பேருக்கு பிடித்த காய்கறியாகவும், பிடிக்காத காய்கறியாகவும் கத்திரிக்காய் உள்ளது. கத்தரிக்காயை சாம்பார், புளிக்குழம்பு மற்றும் அசைவம் போன்ற எல்லா உணவுகளிலும் சேர்ப்பார்கள். ஆனால் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் வறுத்து கொடுத்தால் அதனை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் நாவூறும் கத்தரிக்காய் வறுவல் செய்யலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கத்தரிக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

  1. கத்தரிக்காய்-1/4 கிலோ
  2. வெங்காயம்-3
  3. மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள்-காரத்திற்கேற்ப
  5. சீரக தூள்-1/2 தேக்கரண்டி
  6. எண்ணெய்-4 தேக்கரண்டி
  7. உப்பு – தேவையான அளவு

கத்தரிக்காய் செய்முறை:

 kathirikai varuval

கத்தரிக்காயை நீட்ட நீட்டமாக கட் செய்து கொள்ளவும். வெங்காயம் சிறிது சிறிதாக நீட்ட நீட்டமாக கட் செய்து கொள்ளவும். தக்காளி அதிகமாக போட கூடாது, அதனால் பாதி தக்காளியை சிறியதாக கட் செய்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 3 தேக்கரண்டி ஊற்றவும், பின் இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சுருங்கிய பதம் வந்த பிறகு நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கி கொள்ளவும். கத்தரிக்காய் சுருங்கிய பதம் வந்தவுடன் மஞ்சள் தூள், காரத்திற்கேற்ப  மிளகாய் தூள், சீரக தூள் 1/2 தேக்கரண்டி, உப்பு தேவையான  சேர்த்து வதக்கி கொள்ளவும். மசாலா எல்லாம் மிக்ஸ் ஆகின்ற அளவிற்கு வதக்கி கொள்ளவும்.

பிறகு லேசாக தண்ணீர் தெளித்து வதக்கி விடவும்.  தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ள்வும். மசாலாவில் உள்ள பச்சை வாசனை போகி, கத்தரிக்காய் சுருங்கி கொஞ்சமாக வந்திருக்கும் அப்போது அடுப்பை அணைத்து விடலாம். அவ்ளோ தாங்க கத்தரிக்காய் வறுவல் ரெடி.!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement