செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி.?

Advertisement

செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி.?

மீன் என்று சொன்னவுடனே சில நபர்களுக்கு நாவில் உமிழ் நீரை சுரக்க ஆரம்பித்து விடும். ஏனென்றால் அவர்களுக்கு மீன் பிரியர்களாக இருப்பார்கள். அந்த மீன் குழம்பை ஒவ்வொரு ஊரிலும் உள்ளவர்களே வெவ்வேறு மாதிரியாக வைப்பார்கள். அது போல ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அது போல தான் குழம்பு வைப்பார்கள். கேரளா மீன் குழம்பு, ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு, செட்டிநாடு மீன் குழம்பு என பல வகைகள் இருக்கிறது. அதில் இன்றைய பதிவில் செட்டிநாடு மீன் குழம்பு வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செட்டிநாடு மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  1. மீன்- 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம்-20 
  3. தக்காளி- 3
  4. இஞ்சி-சிறிய துண்டு
  5. மிளகு- 1 தேக்கரண்டி
  6. தனியா- 2 தேக்கரண்டி
  7. சீரகம்- 1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  9. தனியா தூள்- 1 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள்- காரத்திற்கேற்ப
  11. புளி- தேவையான அளவு
  12. கல்பாசி- சிறிதளவு
  13. கடுகு – 1 தேக்கரண்டி
  14. கருவேப்பிலை- சிறிதளவு
  15. எண்ணெய்- 6 தேக்கரண்டி

 

அப்பப்பா செட்டிநாடு சிக்கன் சுக்கா இப்படி செஞ்சா போதும் சுவை வேற லெவல்ல இருக்கும் 

செட்டிநாடு மீன் குழம்பு செய்முறை:

 செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி

மசாலா தயார் செய்வதற்கு மண் சட்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, தனியா, இஞ்சி, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும், கல்பாசி சிறிதளவு, தக்காளி, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து வதக்கி கொள்ளவும். அடுத்து அதில் தேங்காயை சிறியதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். இவை ஆறிய பிறகு பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து குழம்பு வைப்பதற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்த பிறகு அதில் அரைத்து வைத்த மசாலா, புளி தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு மீனை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்த நிலை வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

செட்டிநாடு மட்டன் கிரேவி சுவையாக இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement