How to Make Chicken Momos at Home in Tamil
மோமோஸ் என்பது ஒரு வகையான சிற்றுண்டி தின்பண்டம் ஆகும். இது ஒரு பிரபலாமான திபெத்திய, நேப்பாளிய உணவு ஆகும். ‘மோமோ’சை பலவகைகளில் செய்யலாம். இன்று நாம் மேமோசை சிக்கனில் செய்ய போகிறோம். அதனை சிக்கன் மோமோஸ் என்றும் சொல்லலாம். சிக்கன் மோமோஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும், அதற்கு என்று ஒரு சட்னி செய்வார்கள் அதனை தொட்டுக்கொண்டு சாப்பிடும் போது இன்னும் சுவை அதிகமாகவே இருக்கும்.
உங்களுக்கு சிக்கன் மோமோஸ் செய்ய தெரியாது என்றால் கவலை வேண்டாம், இங்கு சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி, அதற்கு தேவையான பொருட்கள் என்ன, சிக்கன் மோமோஸுக்கு தொட்டு கொள்ள சட்னி செய்வது எப்படி என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்த்துவிடலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9 |
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – ஒரு கப்
- எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
- பெரிய வெங்காயம் – ஒன்று
- முட்டைகோஸ் – 1/2 கப்
- கேரட் – ஓன்று
- பூண்டு – ஒரு பல்
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
- மிளகு தூள் – 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- நல்லெண்ணெய் – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயையும் எளிதில் குணப்படுத்தும் இந்த ரெசிபி..!
சிக்கன் மோமோஸ் செய்முறை – Chicken Momos Recipe in Tamil:
ஒரு கப் மைதா மாவை ஒரு பவுலில் அதில், தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பிறகு எலும்பு இல்லாத சிக்கனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த சிக்கனில் பொடிதாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு மிளகாய் தூள், மிளகு தூள், நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக பிசைய வேண்டும்.
ஏற்கனவே பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை இப்பொழுது எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நைசாக தேய்த்து எடுத்துக்கொள்ளுங்கள், அல்லது மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரேதறியாக மாவை தேய்த்து ஒரு சிறிய டிபன் பாக்சினை பயன்படுத்தி கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு கட் செய்து எடுத்த மாவை ஒவ்வொன்றாக எடுத்து அதனுள் சிறிதளவு பிசைந்து வைத்துள்ள சிக்கனை வைத்து நன்றாக மடித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் பிறகு அடுப்பில் இட்லி பானையை வைத்து மடித்து வைத்துள்ள சிக்கன் மோமோசை 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான மோமோஸ் தயார்.
இதற்கு சட்னி செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- தக்காளி – இரண்டு
- வரமிளகாய் – 5
- காஷ்மீரி மிளகாய் – 6
- பூண்டு பல் – 4
- உப்பு – தேவையான அளவு
- ஜீனி – சிறிதளவு
சிவப்பு சட்னி செய்முறை – Red Chilli Momos Chutney Recipe in Tamil:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தக்காளிம் வரமிளகாய், காஷ்மீரி மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து தக்காளி முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
15 நிமிடம் அளித்து அதனை எடுத்து நன்கு ஆறவைக்கவும், ஆறியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கிவிட்டு அதனை மிக்சி ஜாரில் சேர்க்கவும், பிறகு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு ஜீனி மற்றும் தக்காளியை வேகவைக்க பயன்படுத்திய நீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும். அவ்வளவு மோமோஸுக்கு ஏற்ற சுவையான சட்னி தயார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
No Oil No Boil இட்லி- செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |