Egg Masala Gravy in Tamil
அசைவம் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! அசைவத்தில் எந்த உணவை கொடுத்தாலும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் மீன், கரி வேறு ஏதும் வாங்க முடியாத பட்சத்திற்கு முட்டையை வைத்து தான் சமைப்போம். இதில் பெரும்பாலும் குழம்பு, வறுவல், பொரியல் செய்து சாப்பிட்ருப்போம். அதனால் இந்த பதிவில் முட்டை மசாலா கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
முட்டை கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- முட்டை- 5
- பெருஞ்சீரகம் –1/4 தேக்கரண்டி
- பட்டை – 1
- கிராம்பு-1
- ஏலக்காய் –2
- பிரியாணி இலை- 1
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- மல்லி தூள் – 2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- கருவேப்பிலை – சிறிதளவு
- தக்காளி- 2
- வெங்காயம்- 2
- எண்ணெய்- 4 தேக்கரண்டி
முட்டை இல்லாமலே ஆம்லெட் செய்ய தெரியுமா.?
முட்டை கிரேவி செய்முறை:
முதலில் கடாய் வைத்து அதில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும். இதனுடன் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம், பட்டை மிளகாய் 1 சேர்த்து கலந்து கொள்ளவும். சிறிதளவு சேர்த்து கொள்ளவும். பிறகு இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் சுருங்கிய பதம் வந்தவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி மல்லி தூள், 1/2 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும். 2 தக்காளியை அரைத்து சேர்த்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அடுத்து 10 முந்திரியை எடுத்து 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். ஊற வைத்த முந்திரியை அரைத்து கொள்ளவும்.
கொதிக்கின்ற குழம்பானது எண்ணெய் பிரிந்த நிலை வரும் போது அரைத்த முந்திரி, வேக வைத்த முட்டையை கீறி சேர்த்து விட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்கக் விடவும். அவ்ளோ தாங்க முட்டை கிரேவி ரெடி.!
மாலை நேரத்தில் உருளைக்கிழங்கு மட்டும் வைத்து இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும் |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |