மாலை நேரத்தில் உருளைக்கிழங்கு மட்டும் வைத்து இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுங்க..! டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..!

Advertisement

Potato Special Snacks Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே..! மே மாதம் தொடங்கி விட்டது. எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறையும் விட்டாச்சு. இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்று சொல்வீர்கள். பொதுவாக குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது அம்மா இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்திருக்கிறீர்கள் என்று கேட்டு கொண்டே வருவார்கள். அதுவும் இந்த லீவு நாட்களில் சொல்லவே வேண்டாம். மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடு என்று சொல்லி அடம் பிடிப்பார்கள். தினமும் என்ன ஸ்நாக்ஸ் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். அதனால் இன்று உங்களுக்கு உதவும் வகையில் ரொம்ப ஈஸியான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்: 

Potato Special Snacks Recipe

  1. உருளைக்கிழங்கு –
  2. சோளமாவு – சிறிதளவு
  3. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 

Potato Special Snacks

முதலில் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதன் தோலை நீக்கி விட்டு, அதை சிப்ஸ் போல சீவி கொள்ள வேண்டும்.

👉 இந்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸை உங்க குழந்தைக்கு செஞ்சி கொடுங்க..! அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்

உருளைக்கிழங்கை நைசாக சீவி எடுத்து கொள்ளுங்கள். பின் அதையும் தண்ணீரில் போட்டு கழுவி, ஒரு துணியில் தனியாக எடுத்து 5 நிமிடம் வரை காயவிடுங்கள்.

உருளைக்கிழங்கில் டிஸ்யூ வைத்து ஈரத்தை துடைத்து எடுத்து கொள்ளவும். பின் அதில் சோளமாவை தூவி கொள்ள வேண்டும்.

Potato Special Snacks

இறுதியாக உருளைக்கிழங்கை உருட்டி அதில் உணவுத் துண்டுகளை ஒன்றாகப் பிடிக்கப் பயன்படுத்தும் Wooden Skewers என்ற மரக் குச்சிகளை அதில் சொருக வேண்டும். அதுபோல எல்லாவற்றிலும் செய்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

10 நிமிடத்தில் கத்தரிக்காயில் இப்படி ஒரு டிஷ் செய்யலாமா.. இந்த டிஸ்ஸை இனிமேலாவது தெரிஞ்சுக்கோங்க..

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

Potato Special Snacks

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கொள்ள வேண்டும். பின் எண்ணெய் சூடானதும் அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட வேண்டும்.

உருளைக்கிழங்கு நன்றாக பொரிந்து நிறம் மாறியதும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கில் இருக்கும் குச்சியை எடுத்துவிட்டு அதில் சிறிதளவு உப்பு, மிளகு தூள், சிறிதளவு மிளகாய் தூள் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் உருளைக்கிழங்கில் புது சுவை தரும் சிப்ஸ் ரெடி..! இனி கடைகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி தருவதற்கு பதிலாக இந்த சிப்ஸை வீட்டிலேயே செய்து கொடுங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும்.

தினமும் ஒரே டீ குடிக்காமல் ஒவ்வொரு நாளும் வித்தியசமான டீ போட்டு குடியுங்கள்

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement