தமிழ்நாடு அரசின் ரூ.5 லட்ச இலவச மருத்துவ காப்பீடு திட்டம்..!

Advertisement

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்..! Chief Minister Comprehensive Health Insurance Scheme Details in Tamil..!

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய விவரம்:– நமது வாழ்க்கையில் இப்போது உள்ள சூழ்நிலையில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிகளவு செலவு செய்வோம். இருப்பினும் நமக்கோ அல்லது நமது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏதாவது மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் தங்களுக்கு தமிழக அரசு 5 லட்ச இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அளிக்கிறது. இந்த காப்பீடு திட்டத்தை பற்றி சிலருக்கு தெரிந்திருக்கும், பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஏழை எளிய மக்கள் நவீன கருவிகளுடன் மருத்துவ சிகிச்சையினை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இலவசமாக பெறலாம்.

இந்த திட்டம் முன்னதாக கலைஞர் காப்பீடு திட்டம் என்றும் தற்பொழுது இந்த திட்டத்தினை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பழைய காப்பீடு தொகை 2 லட்சமாக இருந்தது, ஆனால் தற்பொழுது மத்திய அரசின் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டமும் இணைத்து வருடத்திற்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. சரி இந்த காப்பீடு திட்டத்தை பற்றி படித்தறிவோம் வாங்க.

அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்..!

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்..! TN Gov Health Insurance Details in Tamil..!

மருத்துவ காப்பீடு திட்டம் பெற தகுதி:-

இந்த திட்டம் பொறுத்தவரை ஆண்டு வருமானம் 72,000/-ம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் அனைத்து குடும்பங்களும் பயன்பெறலாம்.

இவர்கள் கிராம் நிர்வாக அலுவலர்களிடம் வருமான சான்றிதழ் பெற்று, குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கு மையத்திற்கு சென்று தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையினை பெறலாம்.

குடும்பம் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் தகுதி விளக்கம்:-

தகுதியுடைய நபரின்  சட்டபூர்வமான மனைவி/கணவர், தகுதியுடைய நபரின் குழந்தை, தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள் இவர்களது பெயர்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து 6 மாதத்திற்கு அதிகமாக தங்கிருந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையில் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்.

மேலும் இந்த திட்டத்தில் முகாம்களில் உள்ள இலங்கை மக்கள், முகாமில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்றிதழ்கள் இல்லாமல் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..! எப்படி பெறுவது? 

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை பெறுவது எப்படி?

தங்களுடைய குடும்ப அட்டையின் நகலை வருமான சான்றிதழுடன் இணைத்து, உங்கள் ஊரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீடு திட்டங்களுக்கென்று தனியாக ஒரு துறை உள்ளது. அங்கு சென்று இந்த சான்றிதழ்களை கொடுத்தால் அவர்கள் இந்த சான்றிதழ்களை சரிபார்த்து தங்களை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு தங்களுக்கு 22 இலக்க எண் ஒன்றை கொடுப்பார்கள்.

அந்த 22 இலக்கு எண் வாங்கிய அடுத்த நாளில் இருந்து நமக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் இந்த 22 இலக்க எண்ணினை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை பெறலாம்.

குடும்ப தலைவர் புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும், குடும்ப அட்டையில் உள்ள மற்ற அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

தங்களுக்கு இந்த காப்பீடு திட்டம் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?

உங்களுக்கு காப்பீடு அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய https://www.cmchistn.com/ என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள் அவற்றில் Beneficiary என்பதில் Member ID என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.

இப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு பேஜ் திறக்கப்படும். அவற்றில் தங்கள் காப்பீடு அட்டையில் உள்ள 22 இலக்க எண் அல்லது தங்களுடைய பழைய ரேஷன் கார்டில் உள்ள எண் ஏதாவது ஒன்றை உள்ளிட்டு பின் அவற்றில் உள்ள கேப்சா கோடினை உள்ளிட்டு SEARCH பட்டனை கிளிக் செய்யுங்கள்.

பிறகு தங்களுக்கு காப்பீடு செயல்பாட்டில் உள்ளதா என சில விவரங்கள் காட்டப்படும். இதன்முலம் தங்களுக்கு காப்பீடு செயல்பாட்டில் உள்ளதா என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவ காப்பீடு திட்ட அட்டை எண்ணுடன் தங்களுடைய ஆதார் எண்ணினை இணைக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதை கிளிக் செய்யுங்கள் –> DOWNLOAD

உதவி மையம்:-

இந்த திட்டம் பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தின் 18004253993 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இணையம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள..!

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
தமிழக அரசு இணையதளம் www.cmchistn.com
ஆன்லைனில் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள. click here
தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள  click here
மருத்துவ சிகிச்சைகளும் அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவ உதவி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள. click here

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement