வாங்க விண்ணப்பிக்கலாம்..! இலவச கறவை மாடு வழங்கும் திட்டம்..!

Advertisement

விலையில்லா இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது..! Free Milch Cow Scheme..!

Karavai Maadu Valarpu In Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் விலையில்லா இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், தேவையான ஆவணங்கள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்ப படிவத்தினை உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவமனை சென்று தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். சரி வாங்க நண்பர்களே இப்போது இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன் பெறலாம், தேவைப்படும் ஆவணம், விண்ணப்ப படிவத்தை எப்படி நிரப்புவது என்று தெளிவாக படித்தறியலாம்..!

newபெண்களுக்காக தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டம்..!

திட்டத்தின் பயனாளிகள்:

இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தில் முக்கிய பயனாளியாக மகளிர் இருத்தல் அவசியம். திருநங்கைகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

விதவைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், ஊனமுற்ற பெண்கள் ஆகியோருக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிக்கு அதிகபட்சமாக 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

நில விவரம்:

பயனாளியின் பெயரிலோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இருத்தல் கூடாது.

பசுவிற்கு தேவைப்படும் அளவிற்கு பசுந்தீவனத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் நிலம் இருக்கலாம்.

சொந்தமாக பசு மற்றும் எருமை மாடுகள் இருத்தல் கூடாது.

தொழில் பற்றிய விவரம்:

பயனாளியோ அல்லது அவரது வாழ்க்கை துணையோ, தந்தை, தாய், மாமனார், மாமியார், மகன், மகள், மருமகன், மருமகள் ஆகிய நபர்களில் யாரேனும் மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவராக இருக்கக்கூடாது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் எதிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.

நிபந்தனைகள்:

இலவச கறவை மாடு பெறும் பயனாளிக்கு, இலவச ஆடு வழங்கப்படமாட்டார்கள்.

கிராம பஞ்சாயத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிக்கு சொந்தமாக வீடு இருக்க வேண்டும்.

பயனாளிகளில் 29 சதவீதம் ஆதிதிராவிடர் சமூககத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு சதவீதம் பேர் பழங்குடியின மக்களாகவும் இருக்க வேண்டும்.

உறுதிமொழி:

இலவசமாக கறவை மாடு வழங்கும் திட்டத்தில் கறவை மாடு பெரும் பயனாளியிடம் இருந்து, கறவை மாட்டை குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு விற்கமாட்டேன் என்று உறுதிமொழி பெறப்படும்.

newஅரசு வழங்கும் 90% மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டம்..!

விண்ணப்பிப்பது எப்படி:

விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —> DOWNLOAD HERE>>

 

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும். அவற்றில் கால்நடை பராமரிப்பு துறை, தருமபுரி மாவட்டம் என்று இருக்கும். இவற்றில் வேற மாவட்டத்திற்கு விண்ணப்ப படிவம் தேவைப்பட்டால் விண்ணப்ப படிவத்தினை நீங்கள் அந்தந்த மாவட்டத்தின் பெயரினை கொண்டு எடிட் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

ஸ்டேப் 1:

விண்ணப்ப படிவத்தில் பயனாளியின் பாஸ்போர்ட் போட்டோ, விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை / கணவர் பெயர், வீட்டின் முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண், இனம்(sc / st / other) இவற்றை சரியாக குறிப்பிட வேண்டும்.

ஸ்டேப் 2:

அடுத்ததாக முன்னுரிமை கட்டத்தில் சரியானவற்றை டிக் செய்ய வேண்டும். விவசாய நிலம், கால்நடை இருந்தால் ஆம் / இல்லை என்பதை நிரப்ப வேண்டும்.

ஸ்டேப் 3:

குடும்ப உறுப்பினர் யாரேனும் அரசு பணியில் / உள்ளாட்சி பதவியில் இருந்தால் ஆம்/ இல்லை என்பதை சரியாக தேர்ந்தெடுத்து படிவத்தில் நிரப்ப வேண்டும். அரசு பணியில் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.

அளிக்க வேண்டிய உறுதிமொழி:

மேல் கூறிய வீட்டின் முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறேன் என்று சான்று அளிக்க வேண்டும். இலவசமாக வாங்கும் கறவை மாடுவை வீட்டில் உள்ள நபர்கள் மூலம் பராமரித்து கொள்வேன் என்று அவர்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இதற்கு முன் தமிழ்நாடு அரசின் இலவச கறவை பசு / ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெறவில்லை என்று ஒப்புதல் அளிக்கவேண்டும்.

மேல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் அனைத்தும் உண்மை என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் உண்மை தன்மை அறிந்தே நான் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உறுதிமொழி அளிக்கவேண்டும்.

இலவசமாக வாங்கிய கறவை மாடுவை சரியாக பராமரிக்காமல் விட்டாலும், விற்பனை செய்து விட்டாலும், அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படுவேன் என்றும் உறுதி அளிக்க வேண்டும்.

இவற்றில் அனைத்திற்கும் ஒப்புதல் அளித்து இறுதியாக விண்ணப்பதாரர் கையொப்பம் இட வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:

  1. பாஸ்போர்ட் அளவு போட்டோ
  2. ஆதார் அட்டை நகல்
  3. குடும்ப அட்டை நகல்

விண்ணப்ப படிவம் செலுத்தும் விவரம் :

விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணம், விவரத்தை அனைத்தையும் சரியாக நிரப்பி அந்த விண்ணப்ப படிவத்தை எடுத்துக்கொண்டு உங்கள் ஊரில் கிராம சபை நடக்கும். இந்த விண்ணப்ப படிவத்தை வாங்குவதற்கு அந்த கூட்டமானது நிகழும்.

அந்த கூட்டத்தில் அவர்களிடம் விண்ணப்ப படிவத்தை கொடுத்து விட்டால் அவர்கள் உங்களுடைய ஊரில் உள்ள கால்நடை மருத்துவத்தில் விண்ணப்ப படிவங்களை எடுத்து சென்று விண்ணப்பங்களை பரிசீலனை செய்வார்கள்.

பரிசீலனை செய்த பிறகு அவர்களே கறவை மாடுகளை கொடுப்பார்கள். அப்படி இல்லையென்றால் கறவை மாட்டுக்கான ரூபாயை உங்களுடைய வங்கி கணக்கில் செலுத்திவிடுவார்கள். அதற்கான வங்கி விவரங்கள் கொடுக்க வேண்டும்.

மேலும் போக்குவரத்து செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

திட்ட நன்மைகள்:

இலவசமாக வாங்கிய கறவை மாடுவிற்கு ஏதேனும் உடல் சரியில்லாத நிலை ஏற்பட்டாலும் அரசே காப்பீடு தொகை 5% வழங்கப்படும்.

இந்த காப்பீடு தொகையின் மூலமாக மறுபடியும் கறவை மாடு அல்லது மாட்டிற்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இலவசமாக கறவை மாடு பெற்று விவசாயம் செய்ய விரும்பும் பயனாளிகள் இந்த திட்டத்தில் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

newஅரசின் இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement