மாதம் Rs.5,325/- ரூபாய் வருமானம் தரும் அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டம்..!

Advertisement

Pomis Scheme in Tamil

நம்மில் பலர் செய்யும் தவறு என்ன தெரியுமா..? நம்மிடம் பணம் இருந்தால் அதனை வீட்டிலேயே வைத்துக்கொள்வது, அல்லது நகையின் மீது முதலீடு செய்வது மட்டும் தான். நாம் பணத்தை வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. நாம் வைத்திருக்கும் பணத்தை வைத்து எப்படி பயன் பெறலாம் என்பது மட்டும் தான் முக்கியமான விஷயம் அல்லவா..? சரி உங்களிடம் பணம் இருந்தால் என்ன செய்வீர்கள். அதனை வங்கியில் உங்களின் கணக்கில் போட்டு வைப்பீர்கள். இப்படி செய்வதால் உங்களுக்கு என்ன லாபம் சொல்லுங்கள்.!

சிலர் அதனை தகுந்த இடத்தில் முதலீடு செய்து லாபம் பெறுவார்கள். சிலருக்கு ஒன்றும் தெரியாது அதனை அப்படியே அன்றைய செலவுகளுக்கு பயன்படுத்துவார்கள். இனி யாரும் அப்படி செய்யாதீர்கள். மாதம் மாதம் Rs.5,400 ரூபாய் பெரும் அருமையாக திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Pomis Scheme in Post Office in Tamil:

நம்மிடம் மொத்தமாக பணம் இருந்து அதை முதலீடு செய்ய நினைத்தால் அதை போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் மாதம் மாதம் ஒரு வட்டி கிடைக்கும். அதேபோல் திட்டத்தின் கால அளவு முடிந்த பிறகு மொத்த பணத்தையும் சரியாக பெற்றுக் கொள்ளலாம்.

2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

யார் முதலீடு செய்யலாம்:

18 வயது பூர்த்தி ஆன இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் ஜாயிண்ட் ஆவுண்ட், கூட சேர்ந்து கொள்ளலாம். மைனர் குழந்தைகள் பெயரில் அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் சேர்த்து பயன்படுத்தலாம்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்:

குறைந்தபட்சமாக 1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக தனி கணக்கு என்றால் 4.5 லட்சம் அதுவே ஜாண்ட் அக்கௌன்ட் என்றால் 9 லட்சம் வரை முதலீடு செய்யவும்.

இந்த திட்டத்தின் கால அளவு 5 வருடம். இந்த 5 வருடத்தில் ஒவ்வொரு மாதமும் வட்டி தொகையை பெறலாம்.

வட்டி:

இந்த திட்டத்தின் வட்டியாக 7.1 சதவீதம் வழங்குகிறார்கள். இதில் என்னவென்றால் திட்டத்தின் முதலில் எவ்வளவு வட்டி வழங்குகிறார்களோ அதே வட்டியை தான் 5 வருடம் முழுவதும் வழங்குவார்கள்.

மாதந்தோறும் 420 ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் பெறும் அரசின் திட்டம்

Premature Closure:

நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து முதிர்வு காலம் முடிவிற்கு முன்பு இடையில் இந்த கணக்கை முடிக்க நினைத்தால் அது 1 வருடத்திற்கு பிறகு தான் முடிக்க முடியும். டெபாசிட் தொகையில் 2 சதவீதம் தொகையை பிடித்தம் செய்து அதன் பின்பு தான் இந்த தொகை கிடைக்கும்.

இந்த திட்டத்தில் நாமினியும் வழங்குகிறார்கள். இந்த திட்டத்தின் போது பயனாளர் இறக்கும் பட்சத்தில் யாரை நாமினியாக பதிவு செய்தீர்களோ அவர்களுக்கு டெபாசிட் தொகை கிடைக்கும்.

உதாரணம்:

டெபாசிட் தொகை  மாதம் வட்டி  வட்டி 5 வருடம்  மொத்த தொகை 
Rs.50,000/- Rs.295/- Rs.17,750/- Rs.67,750/-
Rs.1,00,000/- Rs.591/- Rs.35,500/- Rs.1,35,500/-
Rs.2,00,000/- Rs.1,183/- Rs.71,000/- Rs.2,71,000/-
Rs.4,50,000/- Rs.2,662/- Rs.1,59,750/- Rs.6,09,750/-
Rs.9,00,000/- Rs.5,325/- Rs.3,19,500/- Rs.12,19,500/-

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement