Post Office Whole Life Assurance Details in Tamil
இன்றைய சூழலில் அனைவரிடமும் எதிர் கால சேமிப்பு பற்றிய அதிக விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் எந்த திட்டத்தில் சேமித்தால் அதிக முதிர்வுத்தொகை கிடைக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வதில் தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அப்படி உங்களுக்கும் சந்தேகம் உள்ளதா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான் ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் Whole Life Assurance பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபீஸின் அசத்தலான ஆயுள் காப்பீடு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா
Whole Life Assurance (Suraksha) in Tamil:
இந்த பாலிசியை (Suraksha) என்றும் அழைப்பார்கள். இந்த பாலிசியில் எடுப்பதன் மூலம் உங்கள் வாழ்நாள் முழுவதும் பயன் பெறலாம். இது ஒரு முதலீட்டு மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கை ஆகும்.
இந்த பாலிசியில் 19 – 55 வயது வரையிலானவர்கள் இணைந்து கொள்ளலாம்.
நன்மைகள்:
இதில் குறைந்தபட்ச கவரேஜ் தொகை 20,000 ரூபாய் வரையிலும், அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையிலும் க்ளைம் செய்ய முடியும்.
இந்த பாலிசி போட்ட நான்கு வருடத்திற்கு பிறகு லோன் வாங்கி கொள்ள முடியும்.
இந்த பாலிசி எடுத்து மூன்று வருடத்திற்கு பின்னர் சரண்டர் செய்தும் கொள்ளலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தின் கீழ் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன..?
இந்த Whole Life Assurance (Suraksha) பாலிசியில் நீங்கள் எடுத்திருக்கும் காப்பீட்டு தொகையில் இருந்து ஒவ்வொரு 1000 ரூபாய்க்கு 76 ரூபாய் போனஸ் வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு நீங்கள் 1,00,000/- ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தால் வருடம் வருடம் உங்களுக்கு 7600/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.
நீங்கள் 80 வயதை அடையும் போது முதிர்வுத் தொகை (உறுதிப்படுத்தப்பட்ட தொகை மற்றும் திரட்டப்பட்ட போனஸ் தொகை) உங்களுக்கு வழங்கப்படும். அப்படி நீங்கள் 80 வயதிற்குள் இறந்து விட்டீர்கள் என்றால் உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் இறப்பு நாள் வரை திரட்டப்பட்ட ஏதேனும் போனஸ் உங்கள் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபீஸில் இன்சூரஸ் எடுத்தால் எவ்வளவு போனஸ் வழங்கப்படுகிறது தெரியுமா?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |