தபால் துறை பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
சேமிப்பது ஒரு முறையாக இருந்தாலும் அதனை சேமிப்பதில் பல வகையாக இருக்கிறது. நாம் எந்த திட்டத்தில் சேமிக்கிறமோ அதை பொறுத்து தான் மெச்சூரிட்டி தொகையும் கிடைக்கும். அதனால் நாம் தபால்துறை, வங்கி, நிதி நிறுவனம் போன்றவற்றில் இருக்கும் திட்டத்தில் பணத்தை சேமிக்கின்றோம்.
இவற்றில் எல்லாம் சேமிப்பதனால் வட்டி தொகையானது அதிகமாக கிடைக்கும் என்பதால் சேமிக்கிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறை பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.
தகுதி:
தபால் துறையில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் பணத்தை முதலீடு செய்து பயன்பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபர் 1 கணக்கை மட்டுமே வைத்து கொள்ள முடியும்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் கார்டு
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்திற்கான குறைந்த பட்ச முதலீடு தொகை 500 ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகையாக 1,50,000 ரூபாய் ஆகும்.
வட்டி:
இந்த திட்டடத்தில் தற்போது வட்டி விகிதம் 7.10% வழங்கப்படுகிறது. இந்த வட்டியானது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை மாற்றி அமைப்பார்கள்.
கால அளவு:
இந்த திட்டத்தில் கால அளவாக 15 வருடம் வழங்கப்படுகிறது. அதே நீங்கள் இதில் கணக்கை மீண்டும் தொடர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதில் 2 வகையான விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
Extension With Deposit:
இந்த முறையினை நீங்கள் தேர்வு செய்தால் அடுத்த 5 ஆண்டும் குறிப்பிட்ட தொகையினை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டி இருக்கும்.
ஏப்ரல் 4 தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் வரை பெற முடியும்.
Extension Without Deposit:
இதில் அடுத்த 5 வருடத்திற்கு எந்த விதமான தொகையும் செலுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக உங்களுடைய கணக்கில் உள்ள சேமிப்பு தொகைக்கு வட்டி மட்டும் உங்களுக்கு அளிக்கப்படும்.
பணம் வாங்கி கொள்ளும் வசதி:
நீங்கள் இந்த திட்டத்தில் கால முடிவதற்குள் பணம் வேண்டுமென்றால் அவற்றை பெற்று கொள்ளும் வசதி இருக்கிறது. நீங்கள் கட்டிய தொகையிலிருந்து 50% பணத்தை பெற்று கொள்ளலாம்.
Premature Closure:
நீங்கள் இந்த திட்டத்தில் கால முடிவதற்குள் கணக்கை முடிக்க வேண்டுமென்றால் மூன்று காரணத்திற்காக முடித்து கொள்ளலாம்.
மெடிக்கல் ட்ரீட்மெண்ட் ஆக கணக்கை முடித்து கொள்ளலாம்.
நீங்கள் உயர் கல்வி முடிக்க வேண்டுமென்றால் கணக்கை முடித்து கொள்ளலாம்.
நீங்கள் வெளிநாடு செல்வதாக இருந்தாலும் கணக்கை முடித்து கொள்ளலாம்.
எவ்வளவு கிடைக்கும்:
Post Office PPF Scheme Details 2023 | ||||
முதிர்வு காலம் | மாதாந்திர முதலீடு தொகை | மொத்த முதலீடு தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
15 வருடம் | 3,000 ரூபாய் | 5,40,000 ரூபாய் | 4,36,370 ரூபாய் | 9,76,370 ரூபாய் |
Extension With Deposit:
இந்த முறையில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாயினை 15 வருடத்திற்கு முதலீடு செய்தால் 9,76,370 ரூபாய் கிடைக்கும். மீண்டும் 5 வருடத்திற்கு டெபாசிட் செய்தால் இந்த திட்டத்தின் மூலம் 15,97,989 ரூபாய் கிடைக்கும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |