போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2023
அனைவருடைய ஊரிலும் மிக அருகிலேயே போஸ்ட் ஆபீஸ் உள்ளது. அத்தகைய போஸ்ட் ஆபீஸில் நிறைய சேமிப்பு திட்டங்கள் நாம் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் மற்ற வங்கி அல்லது நிதிநிறுவனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கூடுதலான வட்டியும் போஸ்ட் ஆபீஸில் உள்ள திட்டங்களுக்கு அளிக்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இப்போது ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்ட காரணத்தினால் புதிய வட்டி விகிதம் தபால் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸில் மாதந்தோறும் 500 ரூபாய் செலுத்தி 2,00,000 ரூபாய் பெறக்கூடிய ஒரு அருமையான சேமிப்பு திட்டதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Selvamagal Scheme in Post Office Details 2023:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமானது முற்றிலும் பெண் குழந்தைகளுக்கான ஒரு திட்டம் ஆகும். அதுபோல ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
மேலும் இந்த திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியில் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
வயது தகுதி:
பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர விரும்பினால் அதற்கான வயது தகுதி 10 வயதிற்கு உப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.
முதலீடு தொகை:
இத்தகைய திட்டத்திற்கான குறைந்த பட்ச தொகை 250 ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகை 1,50,000 ரூபாய் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் படி ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் 1,50,000 வரைக்குள் உங்களால் முடிந்த தொகையினை முதலீடு செய்ய வேண்டும்.
வட்டி விகிதம்:
தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6% ஆகும்.
முதிர்வு காலம்:
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க வேண்டும் என்றால் அதற்கான முதிர்வு காலம் 21 வருடம் ஆகும். ஆனால் நீங்கள் இதில் வெறும் 15 வருடம் மட்டுமே பணத்தை செலுத்தினால் போதும்.
விதிமுறைகள்:
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் உங்களுடைய சேமிப்பு தொகையினை 21 வருடம் கழித்து தான் பெற முடியும்.
உங்களுடைய குழந்தைக்கு பள்ளி கட்டணம் ஏதேனும் கட்ட வேண்டும் என்றால் அதற்கான தொகையினை மட்டும் பெற்று கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் பாதி தொகையினை பெற்று கொள்ளலாம்.
மேலும் இதில் லோன் பெரும் வசதி கிடையாது.
இந்த திட்டத்தில் மாதந்தோறும் 500 ரூபாய் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை எவ்வளவு:
போஸ்ட் ஆபீஸில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் முதலீடு செய்தால் 15 வருடம் கழித்து உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Selvamagal Scheme in Post Office Details 2023 | ||||
முதிர்வு காலம் | மாதாந்திர முதலீடு தொகை | மொத்த சேமிப்பு தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
15 வருடம் | 500 ரூபாய் | 90,000 ரூபாய் | 1,65,185 ரூபாய் | 2,55,185 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ தபால் நிலையத்தில் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் Rs.1,62,647/- பெறும் அருமையான திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |