அரசுப் பள்ளியில் காலை உணவு திட்டம்..! அரசாணை வெளியிட்டது..!

School Breakfast Scheme in Tamil

School Breakfast Scheme in Tamil

நமது தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தற்பொழுது அரசாணையை வெளியிட்டுள்ளது. இதற்காக நமது தமிழக அரசு முதற்கட்டமாக செயல்படுத்திட 2022-2023 ஆம் ஆண்டிற்காக 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ம் தேதி நடந்த சட்டப்பேரவையில் பலவகையான அறிக்கைகளை வெளிட்டார். அவற்றில் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை நேரங்களில் சிற்றுண்டிகள் வழங்கப்படுவதும் ஒன்றாகும். இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.. இந்த திட்டத்தின் கீழ் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது. மேலும் இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

தற்பொழுது எந்தெந்த மாவட்டங்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது?

பெருநகர சென்னை மாநகராச்சி:

மாநகராட்சியின் பெயர்பள்ளிகளின் எண்ணிக்கை
சென்னை 36

மற்ற மாநகராட்சிகள்:

மாநகராட்சியின் பெயர்பள்ளிகளின் எண்ணிக்கை
திருச்சி 40 பள்ளிகள் 
காஞ்சிபுரம்20 பள்ளிகள் 
கடலூர் 15 பள்ளிகள் 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்21 பள்ளிகள் 
வேலூர் 41 பள்ளிகள் 
தூத்துக்குடி 8 பள்ளிகள் 
மதுரை 26 பள்ளிகள் 
சேலம்54 பள்ளிகள் 
திண்டுக்கல் 14 பள்ளிகள் 
திருநெல்வேலி 22 பள்ளிகள் 
ஈரோடு 26 பள்ளிகள் 
கன்னியாகுமரி19 பள்ளிகள் 
கோயம்புத்தூர் 62 பள்ளிகள் 
மொத்தம் 381

நகராட்சி:

மாவட்டம் பெயர் நகராட்சியின் பெயர் பள்ளிகளின் எண்ணிக்கை
விழுப்புரம் விழுப்புரம் 13
திண்டிவனம் 6
புதுக்கோட்டைபுதுக்கோட்டை8
பெரம்பலூர் பெரம்பலூர் 3
செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் 8
கூடுவாஞ்சேரி 2
நாமக்கல் நாமக்கல் 3
திருச்செங்கோடு 7
திருவண்ணாமலைதிருவண்ணாமலை 17
திருவத்திபுரம் (செய்யாறு)7
அரியலூர் ஜெயங்கொண்டம் 9
ராணிப்பேட்டைஆற்காடு6
திருப்பத்தூர்ஆம்பூர் 6
வாணியம்பாடி5
மயிலாடுதுறைமயிலாடுதுறை 11
சீர்காழி9
நாகப்பட்டினம்நாகப்பட்டினம் 11
இராமநாதபுரம் பரமக்குடி7
சிவகங்கைகாரைக்குடி7
தூத்துக்குடிகோவில்பட்டி2
திருவாரூர் மன்னார்குடி 4
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம்9
மதுக்கரை3
மொத்தம்163

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 6th to 12th வரை அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்

வட்டாரங்கள் / கிராம ஊராட்சி:

மாவட்டம் பெயர் நகராட்சியின் பெயர் பள்ளிகளின் எண்ணிக்கை
கிருஷ்ணகிரிசூளகிரி 133
தருமபுரி பாலக்கோடு112
கரூர் கிருஷ்ணராயபுரம் 77
தூத்துக்குடி விளாத்திகுளம் 56
திருப்பூர் குண்டடம் 77
சிவகங்கைஎஸ். புதூர் 47
தேனி மயிலாடும்பாறை 51
விருதுநகர் காரியாபட்டி 69
திருச்சிராப்பள்ளி துறையூர் 41
தென்காசி மேலநீலிதநல்லூர் 29
குருவிகுளம் 36
மொத்தம் 728

மலைப்பகுதி:

மாவட்டம் பெயர் வட்டாரத்தின் பெயர்கள்பள்ளிகளின் எண்ணிக்கை
கள்ளக்குறிச்சிகல்வராயன்மலை 15
நாமக்கல் கொல்லிமலை 41
திருவண்ணாமலை ஜவ்வாதுமலை 46
திண்டுக்கல் கொடைக்கானல்34
ஈரோடு தாளவாடி 38
நீலகிரிகூடலூர்63
மொத்தம் 237

School Breakfast Scheme in Tamil

மொத்தமாக மாநகராட்சி மையங்களில் 417 பள்ளிகளும், நகராட்சி மையங்களில் 163 பள்ளிகளும், வட்டாரங்களில் 728 பள்ளிகளும், தொலைதூர / மலைப்பிரதேசங்களில் 237 பள்ளிகள் என்று மொத்தமாக 1545 பள்ளிகள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

உணவு விவரம்

  1. திங்கட்கிழமை – ரவா உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா, கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
  2. செவ்வாக்கிழமை – ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி.
  3. புதன்கிழமை – ரவா பொங்கல், வெண் பொங்கல் + காய்கறி சாம்பார்.
  4. வியாழக்கிழமை – சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
  5. வெள்ளிக்கிழமை – ஏதாவதாவது ஒரு கிச்சடி வகையுடன் (செவ்வாக்கிழமை உணவு வகையின்படி) ரவா கேசரி, சேமியா கேசரி.
  6. வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி

முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 School Breakfast Scheme Details in Tamil

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil