இதெல்லாம் லோ சுகர் இருப்பதற்கான அறிகுறிகளா.. இது தெரியாம போச்சே..!

Advertisement

இதெல்லாம் லோ சுகர் இருப்பதற்கான அறிகுறிகளா.. இது தெரியாம போச்சே..! Low blood sugar symptoms in tamil

பொதுவாக நமது உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் எந்த ஒரு அறிகுறிகளுமே தெரியாது. அதாவது நமது உடலில் ரத்தத்தில் சர்க்கரை 600 கூட இருந்தாலும் நமக்கு எந்த ஒரு அறிகுறிகளும் தெரியாது. அதுவே நமக்கு லோ சுகர் 1 சதவீதம் இருந்தாலும் கூட அது மிக பெரிய அறிகுறியை நமக்கு தெரிவிக்குமாம்.  சரி இந்த லோ சுகருக்கு என்ன அறிகுறி, இந்த பிரச்சனை வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நமது உடலில் சர்க்கரை எவ்வளவு இருந்தால் அது லோ சுகர்?

பொதுவாக நாம் வெறும் வயிற்றில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை டெஸ்ட் செய்து பார்க்கும்பொழுது அதில் 70-க்கும் குறைவாக இருந்தால் அது லோ சுகர் ஆகும்.

லோ சுகர் அறிகுறிகள் – Low blood sugar symptoms in tamil:Low blood sugar symptoms in tamil

இந்த லோ சுகர் நமக்கு ஒரு விதமான அறிகுறிகளை தெரியப்படுத்தும் அது என்னென்ன அறிகுறி என்று இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.

  • படபடப்பு
  • நடுக்கம்
  • வேர்த்து கொட்டுவது (நீங்கள் AC அறையில் இருந்தாலும் அதிமாக உடல் முழுவதும் வேர்த்து கொட்டும்)

இந்த மூன்று அறிகுறிகளும் பொதுவாக வரும்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்ன?

லோ சுகரை உடனே கட்டுப்படுத்துவது எப்படி?

உங்களுக்கு லோ சுகர் இருக்கிறது என்றால் உடனே இரண்டு ஸ்பூன் குளுகோஸை சாப்பிடவும் உடனே லோ சுகர் கட்டுப்பாட்டிற்குள் வரும். மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் வந்து நீங்கள் உடனே குளுக்கோஸ் சாப்பிட்டு சரியானது என்றால், அது லோ சுகர் ஆகும்.

லோ சுகர் வருவதற்க்கான காரணம் என்ன?

நாம் சாப்பிடும் உணவை மிகவும் தாமதமாக சாப்பிடுவதினால் லோ சுகர் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

நீங்கள் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்காக எடுத்து கொள்ளும் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் லோ சுகர் வரும்.

உணவை மிகவும் குறைவாக சாப்பிடுவது.

அஜீரண கோளாறான வாந்தி வயிற்று போக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாது. இதன் காரணமாக நமது உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். இவைகள் தான் பொதுவாக ஒருவருக்கு லோ சுகர் வருவதற்கு காரணமாக இருக்கும்.

இது போக உங்களுக்கு கிட்னி மற்றும் கல்லீரல் போன்றவற்றில் பாதிப்புகள் இருந்தால் அவர்களுக்கு லோ சுகர் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

லோ சுகர் என்பது மிகவும் சாதரணமா விஷயம் ஆகும், சாதரணமாக மெஸ்=மெடிசன்ஸ் மூலம் பிரச்சனையை குணப்படுத்திவிடலாம். இது ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். பெரியவர்களோ சிரியவர்களோ லோ சுகர் வந்து மயங்கி திடீர் என்று கிலோ வேகமாக விழுந்த கை, கால் அல்லது தலையில் அடிபட்டு அதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலைமையை ஏற்படுத்திவிடும்.

உங்களுக்கு லோ சுகர் இருக்கிறது என்றால் எப்பொழுது உங்கள் கைகளில் குளுகோஸை வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
உடம்பில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement