நீர் பற்றிய கட்டுரை | Importance of Water in Tamil Katturai

Importance of Water in Tamil Katturai

நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai

மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நீர். நீரானது மனிதருக்கு மட்டும் இல்லை, உயிரினங்கள், தாவரங்கள் போன்ற அனைத்திற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் எதனையோ ஒன்றை சார்ந்து தான் இருக்கின்றன. அதில் மனிதன் தன் வாழ்வில் “நீர்”
என்பதை அடிப்படை தேவையாக சார்ந்து வாழ்கின்றான். நீரின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை படிக்கலாம் வாங்க..

உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பொருளடக்கம்:

முன்னுரை 
நீர்களின் பிறப்பிடமாக இருப்பது 
நீரின் முக்கியத்துவம் 
நீரை பாதுகாக்க வழிமுறைகள் 
முடிவுரை 

முன்னுரை:

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு மூல ஆதாரமாக இருப்பது தண்ணீர். மனிதன் உணவு இல்லாமல் கூட உயிர் வாழ முடியும், ஆனால் நீர் அருந்தாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனிதரின் வாழ்வில் நீரானது அவசியமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பறவை, விலங்கின உயிரினங்களுக்கும் நீர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

நீர்களின் பிறப்பிடமாக இருப்பது:

நீரானது ஹைட்ரஜன் மற்றும் (H2O) மூலக்கூற்றினால் உருவானது. பூமியில் நீரானது 71 சதவிகிதமாகவும், 28 சதவீகிதம் நிலத்தாலும் உருவாகியுள்ளது. நீரின் சதவிகிதம் தான் அதிகமாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் போன்றவைகளில் தான் பெரும்பாலும் நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

நீரின் முக்கியத்துவம்:

திருவள்ளுவர் நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்கிறார். நீரின் முக்கியத்துவம் அந்த அளவிற்கு அமைந்துள்ளது. நீரானது உடல் சூட்டை தனிப்பதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற உதவியாக இருப்பது நீர் தான். உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் சுரப்பதற்கும் நீர் மட்டுமே ஆதாரமாக விளங்குகிறது. நீர் மனித மற்றும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய தொழிலுக்கு, தொழிற்சாலைகளுக்கு, உணவு உற்பத்தி போன்ற அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவமாக இருக்கிறது.

நீரை பாதுகாக்க வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் அனைவரும் நீரினை அத்தனை வழிமுறைகளோடு பாதுகாத்து வந்தார்கள். நீர் வீணாகிவிட கூடாது என்று குளங்கள், ஏரி போன்று அமைத்து நீர் தேக்கம் கட்டி நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். நீர் தேக்கங்களை அழிக்க விடாமல் இன்றைய சந்ததியினர் நாம்தான் அவற்றை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நீரை எடுக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளை மூட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். காடுகளை அழிப்பதை தவிர்த்துவிட்டு மரம் வளர்ப்பதை மேற்கொள்ள வேண்டும்.

முடிவுரை:

எல்லாவற்றிற்கும் நீர் முக்கியத்துவமாக இருப்பதால் நீரினை வீணடிக்காமல் பாதுகாப்பது நமது கடமையாகும். நீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதற்காக மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் நீர் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது என்று நினைத்தால் கண்டிப்பாக நீரினை பாதுகாப்போம்..!

இயற்கை வளம் கட்டுரை
மரம் வளர்ப்போம் கட்டுரை
மழைநீர் சேகரிப்பு கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai