மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

Save Electricity Speech in Tamil

மின்சார சேமிப்பு கட்டுரை..! Minsara Semippu Katturai..!

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத உலகம் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. சிறிய கடை முதல் பெரிய தொழிற்சாலைகள்வரை மின்சாரம் இல்லாமல் இயக்க முடியாத அளவு மின்சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். இன்றைய மின்சார செலவு என்பது வரம்பு மீறி வீட்டு பட்ஜெட்டில் பெரிய செலவு என்ற நிலை வந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது. தினமும் நம் செலவுகளை குறைத்து சிக்கனமாக செலவு செய்து பணத்தை சேமிப்பது போல மின்சாரத்தை  சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டும். ஆகவே இந்த பதிவில் மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரையை பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை – Save Electricity Speech in Tamil:

முன்னுரை:

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. அதாவது இப்பொழுது எல்லார் வீட்டிலும் மின்சார இணைப்பு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.

குறிப்பாக மின்சாரம் இல்லாவிட்டால் இந்த உலகமானது இருளில் மூழ்கிவிடும். மற்றும் எமது அன்றாட காரியங்களை கூட செய்ய முடியாத நிலையானது ஏற்படும். ஏன் என்றால் மின்சாரம் அந்தளவிற்கு எம் அனைவருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. இக்கட்டுரையில் மின்சாரம் சேமிப்பு பற்றி படித்தறியலாம் வாங்க.

மின்சாரத்தின் தேவை:

வீட்டிலே நாம் இன்று பல உபகரணங்களை பயன்படுத்துகின்றோம். அவை அனைத்தையும் இயக்குவது மின்சாரம் தான்.

வெளிச்சம் தருகின்ற மின் பல்புகள், தொலைக்காட்சி, மின்விசிறிகள், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின் அழுத்திகள், நீர் இறைக்கும் மோட்டார்கள், மின்சார அடுப்புகள், தொலைபேசிகள், கணணிகள் என பலவகையான மின்சார சாதனங்களை நாம் தின்தோறும் பயன்படுத்தி வருகின்றோம். இவை அனைத்தையும் இயக்குவதற்கு மின்சாரமானது தேவையானதாக உள்ளது.

மின்சார வீணடிப்பு:

நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்க்காக தினந்தோறும் அதிக அளவிலான மின்சாரங்களை பயன்படுத்தி வருகின்றோம். இதன் காரணமாக மின்சாரம் அதிகளவில் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்களை பயன்படுத்திய பின் அதனை நிறுத்தாமல் விடுவது, தேவையற்ற மின் சாதனங்களி அதிகளவில் பயன்படுத்துவது இதனால் மின்சாரமானது வீணாக்குகிறது. மக்களுக்காக மத்திய அரசு பலகோடி ரூபாய் செலவு செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதனை மக்கள் யாரும் நினைத்து பார்ப்பது கிடைக்கயது. இனியாவது மின்சாரத்தை அதிகளவு செலவு செய்வதை தவிர்த்து கொண்டு. மின்சாரத்தை சேமிக்க முயற்ச்சி செய்யுங்கள் மக்களே..

மின்சாரம் புகார் கடிதம் மாதிரி

மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள்

மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்று உலகம் உள்ளது.

ஆகவே மின்சார சாதனங்களை நம் பயன்படுத்திய பின் மின்சாரத்தை நிறுத்த வேண்டும், அதிகம் மின்சாரத்தை பயன்படுத்தும் கருவிகளை தவிர்த்து கொள்ளவதன் மூலமாகவும், வினைத்திறனாக மின்சாரத்தை சேமித்து கொள்ள முடியும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவான சக்திவளங்கள் வீணாக்குவதால் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்க வேண்டும்.

முடிவுரை:

இன்றைய காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான அதிகளவு எரிபொருட்கள் தகனமடைய செய்வதனால் அதிக சூழல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் உருவாக துவங்கியுள்ளமையால் அபிவிருத்தி அடைந்த நாடுகள் Solar Panel மூலம் மின்சாரங்களை உருவாக்கும் நகரங்களை அதிகம் உருவாக்கி வருகின்றமை சிறப்பானதாகும். இவ்வாறு பல வழிமுறைகள் மூலம் நாம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியும்.

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்?

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai