76th Independence Day Speech in Tamil
நமது தாய் நாடான இந்திய திருநாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 வரும் திங்கட்கிழமை கொண்டாட இருக்கிறோம். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் இந்திய மக்களின் வாழ்விலும், மனதிலும் ஆழமாக பதிந்த நாளாக விளங்குகிறது. சுதந்திரத்தை பற்றி சொன்னால் சொல்லி கொண்டே இருக்கலாம். சுதந்திரம் அடைவதற்கு பல தலைவர்களையும், மக்களையும் இழந்திருக்கோம். நாம் சுதந்திரமாக நமது தாய் மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே.!
இதையும் படியுங்கள் ⇒ சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் 75 வது சுதந்திரத்தை பற்றிய சில வார்த்தைகள்
சுதந்திரம் காந்தி:
இந்தியாவின் சுதந்திரத்தை ஏற்று நடத்திய பெருமை மகாத்மா காந்தியை சாரும். அகிம்சை வழியில் உப்பு சத்தியாகிரகம் எனும் போராட்டம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமானது. வெள்ளையனே வெளியேறு என்ற சத்தம் இந்தியா முழுவதும் எதிரொலிக்க தொடங்கியது.
இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக 1924 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்ற பிறகு தான் சுதந்திர போராட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இவர் சுதந்திரத்திற்கு மட்டுமில்லாமல் மது ஒழிப்பு, தீண்டாமை, சமூக நீதி இப்படி பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து அதற்காக போராடியுள்ளார். பல நாட்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார். முக்கியமாக தொடர்ச்சியாக 21 நாட்கள் வரை இவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
வ. உ. சி சுதந்திர போராட்டம்:
வணிகம் மூலம் தான் ஆங்கிலேயர் நம் தாய் நாட்டிற்கு வந்தது அனைவரும் அறிந்தது. அவர்கள் வணிகம் மூலமாக நம்மை அடிமை செய்தனர். மிக சிறந்த வழக்கறிஞர் வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆங்கிலேயரின் அஸ்திவாரமான அவர்கள் வணிகத்திலேயே கை வைக்க ஆரம்பித்தார்.
1906-ஆம் ஆண்டு “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை முறைப்படி பதிவு செய்த அவர் பல பேரின் உதிவியோடு கப்பலை வாங்கி அதை இந்தியா, இலங்கை இடையே பயணிக்க செய்தார். இந்திய மக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் கப்பலை புறக்கணித்து வ. உ. சியின் கப்பலில் பயணிக்க துவங்கினர்.
எப்படியாவது சுதேசி நாவாய்ச் சங்கத்தின் கப்பலை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் தங்கள் கப்பல்களில் இலவச பயண திட்டத்தை அறிவித்தனர். ஆனால் ஆங்கிலேயர்களின் திட்டத்தை உணர்ந்த மக்கள் தொடர்ந்து வ. உ. சியின் கப்பலிலேயே பயணித்தனர்.
ஒரு கட்டத்தில் மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ. உ. சி திருப்பி விடுகிறார் என்று குற்றம் சாட்டி வ.உ. சி சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு 40 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு அது 6 ஆண்டுகளாக குறைந்தது.
வ. உ. சி விடுதலை ஆன நேரத்தில் சுதந்திர போராட்டத்தின் நிலை முற்றிலும் மாறி இருந்தது. அகிம்சை வழியை அவர் விரும்பவில்லை. அதே சமயம் அகிம்சை வழியை எதிர்த்தால் சுதந்திர போராட்டத்தில் குழப்பம் வரும் என்று எண்ணிய அவர் சுதந்திர போராட்டத்தில் இருந்து தன்னை சற்று விலகிக்கொண்டார்.
76 வது சுதந்திர தினம் வாழ்த்துக்கள் Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Download Link |
இந்தியா சுதந்திரம் அடைந்த நாள்:
இந்திய சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட சோர்ந்து போகவில்லை. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள் ஜூன் 3-ம் தேதி ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்தது. இந்திய நாடு 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது.
சுதந்திர இந்திய நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள் இந்திய நாட்டில் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும் படி அழைத்தனர். அவர்களுடைய அழைப்பை ஏற்று அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948-ம் ஆண்டு ஜூன் மாதம் மவுண்ட்பேட்டணுக்கு பதிலாக சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அமர்த்தப்பட்டார்.
ஆகஸ்ட் 15 ஆம் நாளை தான் வருடம் வருடம் கொண்டாடி மகிழ்கின்றோம். சுதந்திரம் தினம் அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். சுதந்திரம் தினம் அன்று முப்படை அணி வகுப்பு, நாட்டிய கலை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது, இந்தியாவின் தனிப்பெருமைகளான வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகியவற்றைக் குலைக்காத வண்ணம் நடந்துகொள்வோம் என்று ஒவ்வொரு இந்தியரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏராளமான தலைவர்களாலும் இயக்கங்களாலும் வழிநடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்தில், பல லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்று, உயிர்களை இழந்து, நீண்ட காலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் காப்போம்..!
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |