என் குடும்பத்தை மேம்படுத்த கட்டுரை | En Kudumbam Katturai in Tamil

Advertisement

 குடும்பத்தை மேம்படுத்த  கட்டுரை | kudumpaththai mempaduththa katturai 

குடும்பம் என்றால் யாருக்கு பிடிக்காமல் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும். அதே போல் தான் எனக்கும் என் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். என் குடும்பத்தில் எனக்கு பிடித்தது ஒற்றுமை தான். என் குடும்பத்தில் உறவுகள், நண்பர்கள் அதிகம். அதனால் எப்போதும் என் வீடு கூட்டு குடும்பம் போல் இருக்கும். விட்டுக்கொடுக்க வேண்டியவை நிறைய இருக்கும். என் குடுப்பத்தில் பிறப்பதற்கு நான் மிகவும் பாக்கியம் அடைந்திருக்க வேண்டும். என் குடும்பத்தை மேம்படுத்த ஒரு கட்டுரையை இந்த பதிவில் பார்ப்போம்..!

உழைப்பே உயர்வு கட்டுரை

பொருளடக்கம்:

முன்னுரை
குடும்பத்தின் சிறப்பு
குடுப்பத்தின் ஒற்றுமை
குடும்பத்தை மேம்படுத்துதல்
முடிவுரை

முன்னுரை:

யாரு என்ன சொன்னாலும் யார் என்ன செய்தாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்….! இந்த பாடலை கேட்கும் பொழுது என் குடுப்பத்திற்கான பாடல் வரிகள் என்று பல முறை நினைத்து கொள்வேன். அதே போல் தான் என் குடும்பமும்.

குடும்பத்தின் சிறப்பு:

என் குடும்பத்திற்கு பல சிறப்புகள் இருக்கிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டோம். யாருக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் குடும்பமாக அமர்ந்து பேசிக்கொள்வோம். அதனை சுமுகமாக தீர்ப்பது எப்படி என்பதையும் குடும்பமாக பேசிக்கொள்வோம். என் குடும்பத்தில் எல்லாரும் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். வாரத்தில் ஒருநாள் கோவிலுக்கு சென்று வருவோம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை

குடும்பத்தின் ஒற்றுமை:

என் குடும்பம் என்றாலே பாசம் தான் முன் வருகிறது. அதே போல் கடமையும், உரிமையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் பிள்ளைகள் என்று நினைக்கலாமல் நம் பிள்ளைகள் என்று வளர்ப்பது என் குடும்பத்தின் ஒற்றுமை. என் பிறப்பு முதல் நான் கூட்டு குடுப்பத்தில் வாழ்கிறேன். அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா? இந்த பாக்கியம் கிடைக்கும் அனைவரும் பாக்யசாலிதான்.

என் குடும்பத்தை மேம்படுத்துதல்:

ஒரு குடும்பத்தின் முதுகெலும்பே குடும்ப தலைவி. குழந்தைகளை வளர்ப்பது,  குடும்பத்தை நல்ல முறையில் செயல்படுத்துவது,  சொந்தங்களிடம் அனுசரித்து நடப்பது,  வயது மூத்தவர்களிடம் மரியாதையை காட்டுவது, வரவுகளை அதிகரித்து செலவுகளை குறைத்து சரியான முறையில் எடுத்து செய்வது,  குடும்ப கஷ்டங்களில் தோல் கொடுத்து  நஷ்டங்களை அறிந்து செயல்படுவது  என்னுடைய குடும்பமாகும். ஓவ்வொரு குடும்பத்தில் இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பத்தின் நம்பிக்கையும்   ஒற்றுமையும் குடும்பம் முன்னேறுவதற்கு காரணமாக இருக்கிறது.

முடிவுரை:

குடும்ப ஒற்றுமைக்கு உலகிற்கே நமது நாடுதான் எடுத்துகாட்டாக உள்ளது. நாகரிகத்தை வெளிநாடுகள் அறிமுகப்படுத்தினாலும் அவர்களால் நம்மை அதிசயமாகத்தான் இன்று வரை பார்க்க முடிகிறது. இந்த கால கட்டத்தில் நாடே மாறி வந்தாலும் நம் குடும்பத்தை போல் பல இடங்களில் இந்த காலங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று போல் என்றும் குடும்பமாக விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ்ந்தால் போதும். நம் நாட்டையும் சரி வீட்டை சரி நல்ல முறையில் மேம்படுத்தி எடுத்து செல்லலாம்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement