என்னைக் கவர்ந்த நூல் “திருக்குறள்”கட்டுரை | Ennai Kavarntha Nool Katturai

Advertisement

Ennai Kavarntha Nool Thirukkural Katturai in Tamil | என்னைக் கவர்ந்த நூல் திருக்குறள்

பள்ளி தேர்வுகளில் பொது கேள்விகள் அல்லது புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளில் Ennai Kavarntha Nool Katturai-யும் ஒன்று. இந்த பதிவில் நாங்கள் முழுவதுமாக சொல்லி இருப்பது என்னை கவர்ந்த நூல் திருக்குறள் கட்டுரை பற்றி தான். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு பிடித்த நூல் கட்டுரை 

சுருக்கம்:

  • முன்னுரை
  • Ennai Kavarntha Nool Thirukkural Katturai in Tamil
  • நான் விரும்பும் நூல் திருக்குறள்
  • முடிவுரை

முன்னுரை

என்னைக் கவர்ந்த நூல் என்ற தலைப்பில், நான் எழுத போகும் கட்டுரை Ennai Kavarntha Nool Thirukkural Katturai in Tamil பற்றி தான். தமிழில் என்னதான் எக்கச்சனமான நூல்கள் இருந்தாலும் திருக்குறள் தனி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த குரலில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அத்தனை அர்த்தங்கள் இருக்கின்றது. இரண்டே அடியில் நமது வாழ்கை தத்துவத்தை மிகவும் அழகாக திருவள்ளுவர் கூறியுள்ளார். இது ஒரு கதை அல்லாது ஒரு கதாபாத்திரத்தின் கதை அல்லாது உலக மக்கள் அனைவர்க்கும் தேவைப்படும் அணைத்து கருத்துகளையும் உள்ளடிக்கிய நூலாகும்.

சரி வாருங்கள் Ennai Kavarntha Nool Katturai பற்றி பார்ப்போம்.

Ennai Kavarntha Nool Thirukkural Katturai in Tamil

என்னை கவர்ந்த, எனக்கும் மிகவும் பிடித்தமான நூலாக திருக்குறள் இருப்பதற்கு காரணம் இது ஒரு பொது நூலாகும். மொத்தம் 1330 பாடல்கள் உள்ளது ஒவ்வொரு பாடல்களும் அத்தனை விதமான கருத்துக்களை நமக்கு சொல்லி தருகின்றது. திருவள்ளுவர் இயற்றிய இந்த திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் மொத்தமாக 1330 பாடல்களை எழுதி உள்ளார்.

திருக்குறளில் அறம் என்பது நல்லொழுக்கத்தை குறிக்கும்.

பொருள் செல்வத்தை குறிக்கும்.

இன்பம் மகிழ்ச்சியை குறிக்கும்.

இதில் அறத்துப்பால் – 38 அதிகாரம், பொருட்பால் – 70 அதிகாரம் மற்றும் காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால் -25 அதிகாரம், ஆகா அதிகாரத்திற்கு 10 பாடல்கள் விகிதம் மொத்தம் 1330 பாடல்களை கொண்ட நல்ல பொதுவுடைமை நூலாகும்.

பயணங்கள் பலவகை கட்டுரை – Payanangal Palavagai Katturai in Tamil

நான் விரும்பும் நூல் திருக்குறள்

வெறும் ஏழே சொற்கள் கொண்டு, நமது வாழ்கை பாடத்தை உணர்த்தும் இந்த திருக்குறள் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். இந்த திருக்குறளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு குறள்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

நாம் கற்கும் நூல்களை தெளிவாக குற்றமறக் கற்கவேண்டும், அவ்வாறு கற்றப்பின் அதற்கேற்ற வாறு நாம் நடந்துக்கொள்ள வேண்டும். பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாட்களில் நிறைய நூல்களை படித்திருப்பார்கள், அதில் அவர்கள் கற்கும் ஒரு சிறிய விஷயம் கூட பல சூழ்நிலைகளுக்கு அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கின்றது.

முடிவுரை

திருக்குறள் அனைவரும் படிக்கவேண்டிய நூலாகும். உலக கருத்துக்கள் ஒட்டுமொத்தமும் இதில் அடங்கி உள்ளது. பள்ளி பருவங்களில் நாம் திருக்குறள் படித்திருப்போம், அனைத்து குரல்களும் படித்திருப்போமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். நான் விரும்பும் திருக்குறளை நீங்களும் படித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

நான் மாவட்ட ஆட்சியர் ஆனால் கட்டுரை!

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement