நான் மாவட்ட ஆட்சியர் ஆனால் கட்டுரை!

Advertisement

நான் கலெக்டர் ஆனால் கட்டுரை | Nan Collector Aanal Katturai in Tamil 

இந்த பதிவில் நீங்கள் பார்க்கப்போவது எனது லட்சியம் கட்டுரை அதாவது நான் மாவட்ட ஆட்சியர் ஆனால் கட்டுரை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். எங்களது இணையத்தளத்தில் இது போன்று நிறைய விதமான கட்டுரைகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றேன்.

சுருக்கம்: 

  • முன்னுரை
  • மக்கள் பணி
  • சமூக நலன்
  • நேர்மை
  • முடிவுரை

முன்னுரை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், போலீஸ் ஆகவேண்டும், வக்கீல் ஆகவேண்டும், டாக்டர் ஆகவேண்டும் என்று ஆனால் என்னுடைய லட்சியம் நான் மாவட்ட ஆட்சியர் ஆவதுதான். வரும்காலத்தில் நான் மாவட்ட ஆட்சியராக ஆகிவிட்டால் என் மக்களுக்காக என்னன செய்வேன் என்று இந்த பதிவில் முழுவதுமாக கொடுத்துள்ளேன்.

எனது லட்சியம் கட்டுரை-மக்கள் பணி

நான் கலெக்டர் ஆனால் என் நாட்டு மக்களுக்கு அயராது உழைப்பேன், அவர்களுக்கு எது இல்லையோ அதனை நிறைவேற்ற உடனடியாக முயற்சியெடுத்து அதனை நிறைவேற்றுவேன். ஒரு மாவட்ட ஆட்சியரின் கடமைகள் என்னனா இருக்கின்றதோ அதற்கேற்றவாறு செயல்படுவேன்.

கல்வித்துறை

  • அனைவரும் தரமான கல்வி கிடைக்க செய்வேன்.
  • அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவேன்.

சுகாதாரம் 

  • தேவைப்படும் அளவிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிப்பேன்.
  • மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தரமான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

வேலை வாய்ப்பு

  • நிறைய விதமான வேலைவாப்புகளை இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்வேன்.
  • வேலைவாப்புகளை உருவாக்க சுற்றுலா துறையை மேம்படுத்துவேன்.

பொருளாதாரம்

  • பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, சிறு குறு தொழில்களுக்கு நிதி உதவிகளை அளிப்பேன்.
  • மானிய விலையில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விவசாய கருவிகளை வழங்குவேன்.

என் லட்சியம் கலெக்டர்- சமூக நலன்

இந்த சமூகத்தில் உலவும் பிரச்சனைகள் வராமல் தடுப்பேன், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு. அனைவருக்கும் தேவையான நலத்திட்டங்கள் அவர் அவர்களுக்கு கிடைக்குமாறு செய்வேன். சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் முயற்சி செய்வேன். மக்கள் மட்டுமின்றி சுற்றுசூழலையும் பாதுகாப்பேன்.

இவை அனைத்தும் மக்களின் துணைகொண்டு நான் செய்து முடிப்பேன்.

என்னைக் கவர்ந்த நூல் “திருக்குறள்”கட்டுரை

எனது குறிக்கோள் கட்டுரை- நேர்மை

நான் மாவட்ட ஆட்சியர் ஆனால் முதலில் ஒலிப்பது ஊழலைத்தான். என்னுடைய வேலையில்  மிகவும் நேர்மையுடனும், வெளிப்படையாகவும் இருப்பேன். மக்களுக்கு என்ன தேவைப்படுகின்றது என்று அவர்களிடமே கேட்டு, அவர்களுக்கானதை செய்வேன்.

முடிவுரை 

இந்த நான் கலெக்டர் ஆனால் கட்டுரை ஒரு கற்பனை கட்டுரையாகும். பிற்காலத்தில் நான் உண்மையாக கலெக்டர் ஆனால் என்னுடைய திறமைக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, மக்களுக்கு அயராது சேவை செய்வேன்.

எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai
Advertisement