பயணங்கள் பலவகை கட்டுரை – Payanangal Palavagai Katturai in Tamil

Advertisement

Payanangal Palavagai Katturai

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் ஏழாம் வகுப்பு, பருவம் இரண்டு இயல் ஓன்று கட்டுரை பயணங்கள் பலவகை. இந்த பயணங்கள் பலவகை கட்டுரைக்கு சில உள்தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது அவை.. முன்னுரை, பயணத்தின் தேவை, தரைவழிப் பயணங்கள், கடல் பயணங்கள், பயணங்களின் பயன்கள், முடிவுரை ஆகிய உள்தலைப்புகளை கொண்டு கட்டுரை எழுத வேண்டும்.

சரி வாங்க இந்த உள்தலைப்புகளை கொண்டு கட்டுரையை எப்படி எழுதலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம். பயணங்கள் பல்வகை கட்டுரை பற்றி, முன்னுரை, பயணத்தின் தேவைதரை, வழிப் பயணம், கடல்வழிப் பயணம், வான்வழிப் பயணம் மற்றும் முடிவுரை போன்றவற்றின் மூலம் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நான் மாவட்ட ஆட்சியர் ஆனால் கட்டுரை!

பயணங்கள் பலவகை கட்டுரை – Payanangal Palavagai Katturai in Tamil

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பயணத்தின் தேவை
  3. தரைவழிப் பயணம்
  4. கடல்வழிப் பயணம்
  5. வான்வழிப் பயணம்
  6. முடிவுரை

முன்னுரை:

அக்கால மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்ய பயணங்களை மேற்கொண்டான். உணவிற்காக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தான். இதுவே பயணத்தின் தொடக்கம் ஆகும். இன்று தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமின்றி பல காரணங்களுக்காகவும் பயணம் செய்கின்றன. அத்தகைய பயணம் பற்றிய தகவல்களை இக்கட்டுரை வாயிலாக காண்போம் வாங்க.

பயணத்தின் தேவை:

இன்றைய உலகில் பலரும் பலவிதமான காரணங்களுக்காக பயணம் மேற்கொள்கின்றன. கல்வி, சுற்றுலா, பொழுதுபோக்கு போன்ற பயணங்களும் உண்டு. எனவே பயணம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த பயணத்தை மூன்று வகையாக கூறலாம்.

  1. தரைவழிப் பயணம்
  2. கடல்வழிப் பயணம் 
  3. வான்வழிப் பயணம்

தரைவழிப் பயணம்:

மனிதன் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுத்த முதல் வழி தரைவழிப் பயணம் ஆகும். நடந்து சென்ற மனிதன் மிதிவண்டி கண்டுபிடித்தான், பின்னர் மாட்டு வண்டி, குதிரை வண்டி, இருசக்கர வாகனம், மகிழுந்து, பேருந்து, தொடர் வண்டி போன்றவற்றை உருவாக்கி தன் பயணத்தை எளிமையாக்கினான். இதுவே தரை வழிப் பயணங்கள் எனப்பட்டன. இது எளிய வகைப் பயணமாக கருதப்படுகிறது.

கடல்வழிப் பயணம்:

“முந்நீர் வழக்கம்” என்ற தொல்காப்பிய வரிகள் மூலம் பழங்கால தமிழரின் கடல் பயணத்தின் தொன்மை நன்கு விளங்குகிறது. வெளிநாட்டு பயணத்திற்கு உதவியாக இருந்தவை கடல் வலீத் பயணங்கள். கடல் வழிப் பயணம் மேற்கொள்ள கப்பல்கள் பயன்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி, செய்யவும், போர் செய்யவும், வணிகநோக்கத்தோடும் கடல் பயணத்தை மேற்கொண்டனர்.

வான் வழிப் பயணம்:

பறவையைக் கண்டா மனிதனின் ஆசையில் கண்டுபிடிக்கப்பட்டதே விமானம். மிக நீண்ட தொலைவையும் எளிதில் கடந்துவிடும் போக்குவரத்து. இன்று உலகை இணைக்கும் போக்குவரத்துச் சாதனமாக வான் வழிப் பயணம் விளங்குகிறது.

முடிவுரை:

பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கிறது. அதுபோல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மனிதனின் பயனும் எளிமையாகிவிட்டது. பயணங்கள் மனித வாழ்விற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எனினும் தேவை அறிந்து பயணிப்போம். உலகை வெல்வோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சங்க இலக்கியம் கட்டுரை

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement