புதிய நம்பிக்கை கட்டுரை Class 10

Advertisement

புதிய நம்பிக்கை கட்டுரை Class 10 PDF

பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கிறது. அதிலும் 10TH, 11th, 12th, படிக்கும் மாணவர்கள் மற்றவர்களை விட அதிகமாக தங்களை தயார் படுத்தி வருவார்கள். கூகுளில் வினாத்தாள் மாதிரிகள், பாடத்திட்டம், கட்டுரை போன்றவை தேடி கொண்டிருப்பார்கள். அந்த வகையில்10ம் வகுப்பு மாணவர்கள் புதிய நம்பிக்கை கட்டுரை தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க புதிய நம்பிக்கை கட்டுரை வடிவில் அறிந்து கொள்வோம் வாங்க..

முன்னுரை:

வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் பிறந்து விட்டாம் என்று நினைத்து வாழ கூடியவர்களாக இருப்பார்கள். சிலருடைய வாழ்க்கை தான் வரலாறு ஆக மாறுகிறது. கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத் சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரை பற்றி இந்த பதிவில் கட்டுரையாக அறிந்து கொள்வோம்.

மேரியின் குடும்ப வாழ்க்கை:

மேரியின் குடும்பத்தில் உள்ளவர்கள் பகல் முழுவதும் பருத்தி காட்டில் வேலை செய்ய கூடியபவராக இருப்பார்கள். இவர்கள் ஒரு நிமிடம் கூட வீணாகி விட கூடத்து என்று நினைக்க கூடியவர்கள். உணவு சமைப்பதற்கு மட்டும் வீட்டிற்கு வந்து சமைப்பாள். சமைத்து முடித்த பின் பிள்ளைகளை சாப்பிடுவதற்கு மட்டும் கூப்பிடுவாள்.

வாழ்க்கையில் நடந்த துன்பம்:

மேரு அவருடைய அம்மாவுடன் ஊருக்கு செல்கிறாள், அங்கு சிறுமிகள் எல்லாரும் விளையாடி கொண்டிருந்தார்கள், அவர்கள் மேரியையும் விளையாட அழைத்தார்கள். அப்போது மேரியின் கண்ணில் ஒரு புத்தகம் தென்பட்டது. மேரி அந்த புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பிக்கிறார்கள். அங்கு இருந்த சிறுமிகள் அந்த புத்தகத்தை தொட கூடாது. உன்னால் படிக்க முடியாது என்று மனது வருந்தும் வகையில் கூறினார்கள்.

மேரி தன்னை அவமானாம்படுத்திய இந்த நாளை நினைத்து கொண்டே இருந்தாள். இதனால் இவள் நான் படிக்கவும், எழுதவும் கற்க வேண்டும் என்று தந்தையிடம் கூறினாள்.

மேரி படிப்பிற்கு உதவி செய்தவர்: 

பதினொரு வயது நிரம்பி மேரி வயல்காட்டிலிருந்து பருத்தி மூட்டையைச் சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தாள். அப்போது வீட்டில் முன்பின் அறிமுகம் இல்லாத பெண் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, நீ படிக்க வேண்டும்; உன் வேலைகளை முடித்தக் கொண்டு சீக்கிரம் வரவேண்டும் என்றனர். மேரிக்கு நா எழவில்லை. வாயடைத்து நின்று வாசிக்கப் புறப்பட்டாள்; படிக்கத் தொடங்கினாள்

புதிது புதிதாக கற்றாள். தன் பாதையை மெல்ல மெல்ல உயர்த்தினாள். இறுதி வகுப்பு படித்த சான்றிதழ் பெற்றாள்.

கோபல்லபுரத்து மக்கள் கட்டுரை Class 10

 பட்டமளிப்பு விழா:

தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்த மேரி, வில்சனின் இளைய மகள் என்னை அவதிக்கா விட்டால் இந்த ஊக்கம் கிடைத்திருக்காது. அச்சிறுமியின் செயல் எனக்கி நேராவிட்டால் இந்த விருது பெற இயலாது என்று எண்ணி பெருமிதம் அடைந்த மேரிக்கு எழுத படிக்கத் தெரியும் எனப் படடம் அளித்து சிறப்பித்தது.

இந்த விழாவின் போது நீ என்ன செய்ய போகிறாய் என்று கேட்டார், அதற்கு அவள் மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று கூறினார்.

மேரி பருத்தி காட்டிற்கு வேலைக்கு சென்றாள், அப்போது மிஸ் வில்சன் பருத்தி காட்டிற்கு வந்தார், அவர் கூறியதாவது, வெள்ளிக்கார பெண்மணி குழந்தையின் படிப்பிற்காக பணம் அனுப்பி உள்ளார். இந்த பணத்தில் படிப்பை பெறுவதற்கு ஆளாக நீதான் இருக்கிறார். நீ மேல்படிப்பிற்காக வெளியூர் செல்ல வேண்டும் என்று கூறினார்.

ஊர் காரர்கள்:

மேரி மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் போது ரயில் நிலையத்தில் ஊரே ஒன்றாக கூடியது. மக்கள் அனைவரும் வெற்றியோடு திரும்பி வா நேற்று கூறி வாழ்த்தினார்கள்.

முடிவுரை:

மனதில் ஆர்வமும், விடாமுயற்ச்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும் மேரியின் வாழ்க்கையில் நடந்த அவமானத்தை வெற்றியாக மாற்றியிருக்கிறாள்.

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி கட்டுரை

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai

 

Advertisement