சிறப்பு விருந்தினர் வரவேற்புரை..!

Advertisement

சிறப்பு விருந்தினரை வரவேற்பு கவிதை – Sample Welcome Speech in Tamil Language

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..! ஒரு விழாவிற்கு அழகே வரும் விருந்தினர்கள் தான். அவ்விருந்தினர்களை நாம் வரவேற்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு வரவேற்கும் பொருட்டு அமைய பெற்றதே இந்த பதிவு. நீங்கள் நிறுவனத்திலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது ஒரு விழாவிற்கு விருந்தினரை வரவேற்கிறீர்கள் என்றால். அப்பொழுது விருந்தினரை நீங்கள் வரவேற்க சில வரிகளிலோ அல்லது கவிதை மூலமாகவோ பேசி வரவேற்க வேண்டும். விருந்தினரை வரவேற்க பேச வேண்டிய கவிதை வரிகளை கீழ் காணலாம் வாங்க..

ஒரு நிகழ்வில் வரவேற்பு உரை தான் மிகவும் முக்கியம். வவேற்புரை நன்றாக நடந்தால் தான் அந்நிகழ்வு முடிவு வரை நன்றாக அமையும். ஆகவே, சிறப்பு விருந்தினரை எப்படி வரவேற்க வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிறப்பு விருந்தினர் வரவேற்புரை:

  • அழகான காலை பொழுது மேகம் சூழ்ந்த வானம்.. முகம் காட்ட சுட்டெரிக்கும் சூரியன்.. புன்னகையோடு மலரட்டும் இந்த நாள். இனிதே தொடங்கட்டும் இந்த விழா நாள்.
  • மூத்த குடியினர் பிறக்கும் முன்பே தமிழாய், உயிராய் பிறந்தது தஞ்சை தரணியில் தலைநிமிர்ந்து நிற்பது என் தாய் மொழி..
  • என் தாய் மொழி தமிழை வணங்கி, என்னை பெற்றெடுத்த தமிழ் தாய்க்கும், என்னை தத்தெடுத்த தமிழ் பூமிக்கும் முதல் வணக்கம்..
  • சிந்திக்க நேரம் இல்லை, செயல்படவும் துணிவில்லை, சிறகாய் பறந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில்.. சில நேரம் ஒதுக்கி எங்கள் அழைப்பை ஏற்று, ஊக்கமும் ஆக்கமும் அளிக்க, பரந்த விரிந்த மனம் கொண்டு, பாசப்பிணைப்பால் பரிசளிக்கவும்.. எங்கள் விழாவில் கலந்துகொண்ட உங்களை. தமிழோடு இணைத்தும், எங்களை பாராட்டி மகிழ வந்திருக்கும் அவையோர் அனைவரையும் வருக வருக என்று, (உங்கள் நிறுவனத்தின் பெயர்) மூலம் வரவேற்பதில் பெரிமிதமடைகிறேன். (என்று உங்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்கவும்)

கல்வி துறை சார்ந்த சிறப்பு விருந்தினரை வரவேற்பு கவிதை:

ஆசிரியர் குலத்தின் இலக்கணமாகவும்,
ஆசிரியர் குலத்தின் இலக்கியமாகவும்,
விளங்குபவர்! களைப்பே அறியாத
கல்வித்துறை காற்றாக விளங்குபவர்! இவர்
பேச்சைக் கேட்டால் கல்லும் கனிந்துருகும்
புல்லும் போர்வாளாய் மாறும்!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பேச்சு போட்டி தொடக்க கவிதைகள்

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → Tamil Katturai
Advertisement