பேச்சு போட்டி தொடக்க கவிதை மற்றும் தொடக்க வரிகள்
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக பேச்சி போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இருக்கும் பதட்டம் என்னவென்றால் எப்படி பேசசு போட்டியை தொடங்குவது, கொஞ்சம் வித்தியாசமாகவும், சூப்பராகவும் மற்றும் எளிமையாகவும் இருந்தாள் நன்றாக இருக்குமே என்று நினைப்பார்கள்.
அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இருக்கு நீங்கள் பேச்சு போட்டியில் சேர்ந்துள்ளீர்கள் என்றால், நீங்கள் எந்த தலைப்பை தேர்வு செய்திருந்தாலும் சரி, நீங்கள் பேச்சு போட்டியின் போது தொடக்கத்தில் பேசக்கூடிய கவிதைகள் மற்றும் தொடக்க வரிகளை பதிவு செய்துள்ளோம் அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பேசுங்கள்..
பேச்சு போட்டி தொடக்க கவிதைகள் – Welcome Speech in Tamil Kavithai
தித்திக்கும் தேன்தமிழ் திக்கெட்டும் பரவட்டும்.முத்தமிழ் தாய்க்கு என் முதற்கண் வணக்கங்கள்!
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் வழியில் வந்த நடுவர் அவர்களே, மரத்தின் வேறு போல் இருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே, அதில் கிளைகளாக இருக்கும் ஆசிரியப் பெருமக்களே, மரத்தில் இருக்கும் இலையான என் அன்பிற்கினிய மாணவச்செல்வங்களே வருங்கால தூண்களே, எதிர்காலம் நீங்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே உங்கள் அனைவருக்கும் எனது முத்தான முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைப்பை புரிந்து பேச்சிலே தரப் போகிறேன் உங்களுக்கு நல்லதொரு விருந்து! எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி கூறி உரையைத் துவங்குகிறேன்
பேச்சு போட்டி தொடக்க வரிகள் – Welcome Speech in Tamil:
அனைவருக்கும் வணக்கம், இங்கு அமைர்ந்திருக்கும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர்/ ஆசிரியை அவர்களுக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கும் முத்தான முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கு பேச எடுத்திருக்கும் தலைப்பு (ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்துகொள்ளுங்கள்)
உங்களுடைய பேச்சு போட்டி உரையை முடிந்த பிறகு இந்த வரியை சொல்லி முடிக்கலாம் (எனக்கு பேச வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி)
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுதந்திர தினம் கட்டுரை
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |