வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிறு சேமிப்பின் அவசியம் கட்டுரை | Siru Semippu Katturai in Tamil

Updated On: November 21, 2024 2:58 PM
Follow Us:
Siru Semippu Katturai in Tamil
---Advertisement---
Advertisement

சிறு சேமிப்பு பற்றிய கட்டுரை | Siru Semippu Katturai in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிறுசேமிப்பு கட்டுரை கட்டுரை பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  சிறு துளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப இளம் வயதிலேயே நாம் சேமிக்க தொடங்கினால் தான் நம்முடைய பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். சிறு சேமிப்பின் அவசியத்தை பெரியோர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கி கொடுப்பதில் ஆரம்பமாகிறது சிறு சேமிப்பின் முக்கியத்துவம்.

ஒவ்வொரு மனிதனின் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனென்றால் நீங்கள் இன்று சம்பாதிக்கும் பணத்தை சிறிதாவது சேமித்தால் தான் நாளைய எதிர்காலத்திற்கு நல்லது. நாம் இந்த தொகுப்பில் சிறு சேமிப்பின் அவசியத்தை கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

சிறுசேமிப்பு பேச்சு போட்டி கட்டுரை:

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
பணத்தின் அவசியம்
சிறு சேமிப்பின் முக்கியத்துவம்
சேமிப்பதற்கான வழிகள்
முடிவுரை

முன்னுரை:

  • சிறு சேமிப்பு என்பது நாம் சம்பாதித்த பணத்தை சேமிப்பது மட்டுமல்ல, நம்மிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை சேமிப்பதும் ஆகும். தண்ணீரை குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்றவற்றில் சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்துவது போல பணத்தையும் சிறுக சிறுக சேமித்து பயன்படுத்த வேண்டும்.

பணத்தின் அவசியம்:

  • சேமிப்பின் அவசியம் கட்டுரை: பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற திருவள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப பொருள் இல்லாதவரை இந்த உலகத்தில் உள்ள யாரும் மதிக்கமாட்டார்கள். சமூகத்தில் மதிப்பும், புகழும் வேண்டும் என்றால் அதற்கு பணம் மிகவும் அவசியம்.
  • நம்மிடம் ஏதாவது ஒரு இக்கட்டான சூழலில் பணம் இல்லையென்றால் அப்போது உதவுவது நாம் சேமித்து வைத்திருக்கும் பணமே. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் ஏற்பட்டாலோ, சொந்தத்தில் ஏதேனும் விஷேஷம் நடந்தாலோ அப்பொழுது பணம் மிகவும் முக்கியம்.
  • பணத்தை சேமிப்பதை விட, சேமித்த பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாமல் இருக்க வேண்டும். பணத்தின் அருமை வறுமையில் தான் தெரியும் ஆகையால் சேமிப்பு மிகவும் அவசியம்.

சிறு சேமிப்பின் முக்கியத்துவம்:

  • Siru Semippu Katturai: சிறு வயதில் இருந்தே நாம் சேமிக்க தொடங்கிவிட்டால் பிற்காலத்தில் எந்த விதமான கடினமான சூழ்நிலைகளையும் எளிமையாக சமாளிக்க முடியும். அவசரமான சூழ்நிலைகளில் நமக்கு சேமித்து வைத்த பணம் மிகவும் உதவியாக இருக்கும். சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற செலவுகளையும் நம்மால் தவிர்க்க முடியும். இளம் வயதிலேயே சேமிக்க தொடங்கினால் தான் முதுமையில் அது உதவியாக இருக்கும்.

சேமிப்பதற்கான வழிகள்:

  • பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன. அஞ்சல் அலுவலகங்கள், அரசு வங்கிகள் போன்றவற்றில் நம்முடைய பணத்தை சேமிக்கலாம்.
  • சிறுவர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக பள்ளி கல்வித்துறை சஞ்சாயிகா எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் சிறு தொகையை சேமித்து அதனை அவர்களின் படிப்பு செலவுக்காக பயன்படுத்தி கொள்ளலாம்.
  • சிறு சேமிப்பு திட்டத்தால் நம்முடைய வீடு மட்டுமின்றி நமது நாடும் வளம் பெரும். சிறுகக் கட்டி பெருக வாழ் என்ற பழமொழிக்கு ஏற்ப அனைவரும் சேமித்து நலமுடன் வாழ்வோம்.

முடிவுரை – சிறு சேமிப்பு கட்டுரை:

சிக்கனமும் சேமிப்பும் கட்டுரை: சிக்கனமாக இருப்பது நம்மிடம் இருக்கும் சிறந்த பண்புகளுள் ஒன்று. சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய பணம் வீணாகாமல் இருப்பதோடு நம்முடைய பொருளாதார நிலை உயர்வுக்கும் வழிவகுக்கிறது. சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும், எனவே நாம் அனைவரும் சிக்கனத்தை பின்பற்றி சேமிக்க பழகுவோமாக.

சிக்கனம் வீட்டைக்காக்கும்! சேமிப்பு நாட்டைக் காக்கும்!

சிறு சேமிப்பு கவிதை
எரிபொருள் சிக்கனம் கட்டுரை

 

மேலும் இது போன்ற கட்டுரை சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  tamil katturai 
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now