How to Transfer Paytm Wallet Money to Bank Account
இந்த நவீன காலத்தை பொறுத்தவரை அனைத்தும் தற்போது உள்ள ட்ரெண்டிற்கு ஏற்றவாறு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் மொபைல் மற்றும் UPI வசதி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக அனைத்து இடங்களிலும் மாறிவிட்ட காரணத்தினால் அதனை நாம் அனைவரும் பயன்படுத்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக Gpay, Phonepay மற்றும் Paytum தான் அதிகமாக அனைத்து இடங்களிலும் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கடைகளுக்கு செல்லும் போது பரிசினை எடுத்து செல்வதற்காக மொபைலை எடுத்து செல்கிறார்கள். ஏனென்றால் மொபைலில் அனைத்து வங்கி வசதியினையும் அமைத்து வைத்து இருப்பதே இதற்கான காரணம். ஆனால்ஒரு சிலருக்கு பணத்தினை எவ்வாறு அனுப்புவது என்ற குழப்பங்கள் இருக்கிறது. எனவே இன்று Paytm Wallet மூலம் பேங்க் Account-ற்கு எத்தகைய முறையில் பணம் அனுப்புவது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பேடிஎம் வேலட் மூலம் பேங்க் கணக்கிற்கு பணம் அனுப்பும் முறை:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள Paytm ஆப்பினை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு Paytm ஆப்பின் Home Screen ஆனது திரையில் தோன்றும்.
ஸ்டேப்- 2
இப்போது அதில் உள்ள Paytm Wallet என்ற Option-ஐ கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.
மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி |
ஸ்டேப்- 3
அடுத்து Transfer to Bank என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில் நீங்கள் 20 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.
அதனால் உங்களிடம் Paytm Wallet-ல் உள்ள தொகைக்கு ஏற்றவாறு அதில் Type செய்து கொடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
இவ்வாறு குடுத்து முடித்த பிறகு Account Details என்பதை கிளிக் செய்தால்இதில் இணைக்கப்பட்டுள்ள கணக்குகள் வரும் அதில் எந்த கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
இதற்கு அடுத்ததாக Proceed என்பதை கிளிக் செய்து Confirm என்பதை கிளிக் செய்தால் போதும் Paytm Wallet-ல் இருந்து உங்களுடைய Bank Account-ற்கு பணம் சென்று விடும்.
ஒருவேளை நீங்கள் Account Details என்பதில் புதிதாக வேறு ஏதேனும் கணக்குக்களின் விவரத்தை கொடுக்க விரும்பினால் Add a new bank account என்பதில் அத்தகைய கணக்கிற்கான தகவலை கொடுங்கள்.
Paytm-ல் UPI பின் மறந்து விட்டிர்களா…காவாய் வேண்டாம் அதற்கான வழிகளை பார்ப்போம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |