Paytm Upi pin Reset
இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் UPI ஆப்பை பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, பணமே எடுத்து செல்ல மறந்து விட்டாலும் UPI-யை பயன்படுத்தி பணத்தை செலுத்துகிறோம். ஒருவரே பல UPI ஆப்பை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு UPI PIN செட் செய்திருப்பார்கள். இதனால் UPI பின்னை மறந்து விடுவீர்கள். ஞாபக மறதி என்பது மனித இயல்பு. இதனால் ஒன்றும் கவலை பட தேவையில்லை. ஏனென்றால் இந்த பதிவில் PAYTM UPI பின்னை Reset செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Paytm Upi pin Reset:
முதலில் Paytm ஆப்பை ஓபன் செய்யவும். பிறகு அதில் வலது பக்கத்தில் இருக்கும் profile-யை கிளிக் செய்து upi payment settigns என்பதை கிளிக் செய்யவும்.
அதில் நீங்கள் ஓபன் செய்த account details இருக்கும். அதில் நீங்கள் எந்த account -ல் உள்ள upi பின்னை Reset செய்ய வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Reset என்ற ஆப்ஷன் இருக்கும், அதனை கிளிக் செய்த பிறகு Debit card-ன் தகவல்கள் கேட்கும். அதை பதிவிட்ட பிறகு பின் நம்பரை பதிவிடவும்.
போன்பே -யில் பின் நம்பரை மறந்து விட்டீர்களா.! அப்போ இதை பண்ணுங்க..
Paytm Upi pin Change:
Paytm ஓபன் செய்ததும் வலது பக்கத்தில் இருக்கும் profile-யை கிளிக் செய்து UPI payment settigns என்பதை கிளிக் செய்யவும்.
அதில் நீங்கள் ஓபன் செய்த account details இருக்கும். அதில் நீங்கள் எந்த account -ல் உள்ள upi பின்னை Change செய்ய வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Change என்ற ஆப்ஷன் இருக்கும், நீங்கள் ஏற்கனவே பதிவிட்ட upi நம்பரை கேட்கும். அதை பதிவிட்ட பிறகு புதிதாக மாற்ற வேண்டிய upi பின் நம்பரை பதிவிடவும்.
மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |