Hrce Work Details in Tamil
கோவிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளதா..? அப்படி என்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள். கோவிலுக்கு சிலர் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்திற்காக செல்வார்கள். சிலர் அவர்கள் மனதிலிருக்கும் பிரச்சனைகளை அவர்களிடம் சொன்னால் பாரம் குறையும் என்பார்கள். சிலர் கடவுளிடம் கோரிக்கை வைப்பதற்காக செல்வார்கள். அதாவது கடவுளிடம் இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய சொல்லுவதற்காக செல்வார்கள்.
அப்படி சொல்லி அது நடந்துவிட்டது என்றால் உடனே அதற்கு காணிக்கையாக நாம் இது செய்கிறேன், தங்க காசு போடுகிறேன் உண்டியலில் பணம் போடுகிறேன் என்று இது மாதிரி காணிக்கையாக போடுவார்கள். உண்டியல் என்றவுடன் நியாபகத்திற்கு வருகிறது. உண்டியலில் நீங்கள் காசு போடுவீர்களா..? அந்த காசு என்ன ஆகும் யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரிவில்லை என்றால் தெரிந்துகொள்ளுங்கள்..!
Hrce Work Details in Tamil:
அரசிற்கு கீழ் இயங்கி வரும் கோவில் என்றால் அந்த கோவிலில் இருக்கும் உண்டியலை திறப்பதற்கு முன்பு அந்த கோவிலின் அறநிலை துறையில் உள்ள அதிகாரியிடம் ஒரு அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும். அதன் பின்பு அவர்கள் அனுமதி கொடுத்த பிறகு கோவில் உண்டியல் திறப்பதற்கு முன்பு வெளியில் ஒரு போர்டு வைப்பார்கள். பொதுமக்களும் தன்னார்வலர்களும் வந்து கலந்துகொள்ளுங்கள் என்று அறிவிப்பு பலகையில் வைத்திருப்பார்கள்.
அதேபோல் உண்டியலில் சாவி இரண்டு ஆகும். அது ஒன்று கோவிலில் தக்கார் அவரிடமும் ஒரு சாவியும், அந்த கோவிலின் அறங்காவலர் அவரிடம் ஒரு சாவியும் இருக்கும்.
இந்த இரண்டு சாவியிலும் துணியால் கட்டி அரசு சீல் வைத்திருக்கும். அதேபோல் கோவில் உண்டியல் பூட்டிலும் சீல் இருக்கும். இதனை திறப்பதற்கு முன்பு அறநிலை துறையில் நிறைய அதிகாரிகள் வந்து அதனை சரி பார்த்த பிறகு தான், கோவில் உண்டியல் திறக்கப்படும்.
யார் இந்த காசுகளை கணக்கிடுவார்கள்:
யார் வேண்டுமானாலும் கோவில் உண்டியலில் உள்ள காசுக்களை கணக்கிடலாம். காசுகள் எண்ணுவதற்கு முன்பு அவர்களின் ஆதாரங்ககளை பெற்றுக்கொண்டு அவர்களை பரிசோத்தித்து தான் உள் அனுப்புவார்கள்.
அதேபோல் தமிழ் நாட்டில் உண்டியல் காணிக்கை வரும் கோவில் என்றால் அது பழனி மலை தான்.
இந்த கோவிலில் உண்டியல் திறக்கப்படும் போது அந்த கோவிலின் கீழ் செயல்படும் அறக்கட்டளைக்கு பள்ளி, ஆசிரியர், கல்லூரி ஆசிரியர், மாணவர்களை அழைத்து வந்து அவர்களை தான் கணக்கிட உள் அனுப்புவார்கள். முக்கியமாக அவர்களை பரிசோதித்து போன் எதுவும் இல்லாமல் உள் அனுப்புவார்கள்.
உண்டியலை திறக்கும் போது அதிலிருக்கும் பணத்தை ஒரு பெட்டிகளில் மாற்றி அதிலிருந்து கீழ் கொட்டி அதனை மாணவர்கள் காசுகளை தனியாக பிரிப்பார்கள். ஆசிரியர்கள் பணத்தை தனியாக பிரித்து கட்டு போட்டு வைப்பார்கள்.
கோவில் காசு எங்கு இருக்கும்:
கோவில் காசு அந்த கோவிலுக்கு என்று ஒரு கணக்கு இருக்கும். அந்த கணக்கில் இருக்கும். அதேபோல் அது என்ன வங்கியோ அந்த வங்கியில் உள்ள அதிகாரியை வைத்து அவர்கள் ஒரு முறை பணத்தை மிசின் வைத்து சரி பார்த்து அதன் பின்பு தான் கோவில் நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி கொள்வார்கள்.
உண்டியலில் இருக்கும் தங்கம்:
கோவில் உண்டியலில் இருக்கும் தங்கத்தை பிரித்து அந்த தங்கத்தை சரி பார்க்க ஒருவர் இருப்பார்கள். அதை பார்த்து அதனையும் கோவிலுக்கு என்று இருக்கும் லாக்கரில் வைத்து, அந்த லாக்கரில் பூட்டில் 3 அதிகாரிகளின் சீல் வைத்து அதனுடைய சாவியை அறநிலை அதிகாரிகளிடம் நிர்வாகியிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள்.
எப்போது கோவில் உண்டியல் திறக்கப்படும்.
சின்ன கோவில் என்றால் 3 மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்படும். அதுவே பெரிய கோவில் என்றால் மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்படும். திறக்காமல் இருக்கும் கோவில்கள் அனைத்தும் பசலி ஆண்டில் திறக்கப்பட்டும். அதாவது ஜூன் மாதத்தின் இறுதியில் திறந்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கோவில் நிர்வாக உதவியாளரின் மாத சம்பளம் எவ்வளவு
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |