சாலைகளில் போடப்பட்டிருக்கும் கோடுகளின் அர்த்தம்
நாம் சாலையில் செல்லும் போது இடையில் போடப்பட்டிருக்கும் கோடுகள் எதற்காக போடப்பட்டிருக்கிறது என்பது ஒரு சிலருக்கு தெரியலாம், ஒரு சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் தற்போது பல இளைய சமுதாயத்தினரும் விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விதிமுறைகளை தெரிந்து கொண்டும், வாகனம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கூடிய ஒரு சாதனம் என்பதை புரிந்து கொண்டும் வாகனத்தை ஓட்டினால் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இப்பொழுது சாலைகளின் இடையில் போடப்பட்டிருந்த கோடுகள் எதற்க்காக என்பது குறித்து பார்க்கலாம்.
சாலையின் நடுவில் இடைவெளி இல்லாமல் நீளமாக வெள்ளை கோடு:
சாலையின் நடுவில் வெள்ளை கோடு இடைவெளி இல்லாமல் நீளமாக போடப்பட்டிருந்தால் அந்த பகுதியில் வாகனத்தில் வேகமாக சென்று முன்னாள் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல கூடாது.
தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு கலர்ல இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?
சாலையின் நடுவில் இடைவெளியுடன் வெள்ளை கோடுகள்:
சாலையின் நடுவில் வெள்ளை கோடுகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தால் இடது புறமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வலது புறம் வந்து முன்னால் செல்லும் வாகனத்தை கவனமாக முந்திச் செல்லலாம் என்பதை குறிக்கிறது.
இரண்டு கோடுகள் இடைவெளி இல்லாமல் இருந்தால்:
சாலையின் நடுவில் வெள்ளை கோடுகள் இடைவெளி இல்லாமல் இருந்தால் முன் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல கூடாது என்பதை குறிக்கிறது.
ஒரு பக்கம் இடைவெளி இல்லாமல் வெள்ளை கோடு மறுபக்கம் இடைவெளியுடன் வெள்ளை கோடு:
சாலையின் நடுவில் ஒரு பக்கம் வெள்ளை கோடு இடைவெளி இல்லாமலும், அதன் பக்கத்தில் இடைவெளியுடன் வெள்ளை கோடுகள் இருந்தால் நீங்கள் எந்த பக்கத்தில் வாகனத்தில் செல்கிறீர்களா அந்த பக்கத்தில் உள்ள கோடுகளின் விதியை தான் கடைபிடிக்க வேண்டும்.
மஞ்சள் கோடு இடைவெளி இல்லாமல்:
மஞ்சள் கோடானது சாலையின் நடுவில் இடைவெளி இல்லாமல் இருந்தால் அந்தப் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்றும் அந்த பகுதியில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல முயற்சிக்கக் கூடாது என்றும் அர்த்தம்.
ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |