Why Chef Cap is Long in Tamil
பொதுவாக ஒரு கேள்விக்கு பதில் கூறுவது என்பது மிகவும் கடினம் என்று கூறுவார்கள். அதன் படி பார்த்தால் பதில் சொல்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. ஆனால் கேள்வி கேட்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் கேள்வி என்பது கல்வி ரீதியாக வந்தால் அதில் ஒன்றும் அவ்வளவு பெரிய மாற்றம் இருக்காது. அதுவே இவை இல்லாமல் சின்ன சின்ன சந்தேகங்களாக வரும் பட்சத்தில் அதற்கான தீர்வை கண்டுபிடிப்பது என்பது சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கிறது.
இதன் படி பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சந்தேகங்கள் அல்லது சிந்தனை ஆனது காணப்படும். அந்த வகையில் சிலருக்கு சமையல் செய்யும் Chef ஏன் மிகவும் உயரமான தொப்பியினை அணிந்து இருக்கிறார்கள் என்ற சந்தேகம் இருக்கும். அதனால் இன்றைய பதிவில் சமைக்கும் Chef-களின் தொப்பி உயரமாக இருப்பதற்கான காரணத்தை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா
சமையல் செய்யும் செஃப்களின் தொப்பி உயரமாக இருப்பதற்கான காரணம் என்ன..?
பொதுவாக சமையல் செய்வது ஒரு அரிய கலை என்று கூறுவார்கள். அது என்னவோ உண்மை தான். ஏனென்றால் என்ன தான் நாம் பார்த்து பார்த்து சமைத்தாலும் கூட அதனுடைய சுவை மாறாமல் நன்றாக இருந்தால் தான் அது சாப்பிடும் அளவிற்கு இருக்கும்.
இதன் படி பார்த்தால் அன்றாடம் நம்முடைய வீட்டிற்கு சமையல் செய்ய வேண்டும் என்றால் வீட்டில் உள்ளவர்களே சமைத்து விடுவார்கள். அதுவே 50, 100, 500 மற்றும் 5,000 என இதுபோல நிறைய நபர்களுக்கு சமைக்க வேண்டும் என்றால் சமையல் செய்யும் செஃப்களிடம் ஆர்டர் கொடுத்து விடுவார்கள்.
அதேபோல் ஆர்டர் எடுக்கும் நபர்களுக்கு ஏற்றவாறும் அவர்களும் சமைத்து கொடுத்து விடுவார்கள். இவ்வாறு சமையல் செய்யும் செஃப் தலையில் தொப்பி உயரமாக அணிந்து இருப்பார்கள், அதேபோல் சிலர் உயரம் குறைவான தொப்பினையினையும் அணிந்து இருப்பார்கள். இதற்கான காரணம் என்னவென்றால்..?
செஃப்களின் அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்றவாறு மாதிரியாக தான் தொப்பி வழங்கப்படுகிறது. அந்த வகையில் உயரமான தொப்பி அணிந்து இருக்கும் செஃப் அதிக திறமை மற்றும் வாய்ந்த ஒருவர் என்பதை உணர்த்துகிறது.
இவ்வாறு செஃப்கள் தொப்பி அணியும் பழக்கமானது சுமார் 1800 ஆண்டுகளில் இருந்து இருக்கிறது. மேலும் செஃப்கள் அணியும் தொப்பியிலும் சில மடிப்புகளும் இருக்கும். எனவே சமையல் செய்யும் செஃப்களின் தொப்பியின் உயரம் மற்றும் அதில் காணப்படும் மடிப்பு என இவை இரண்டுமே அவரது திறமையினை வெளிப்படுத்தும் ஒன்றாக தான் இருக்கிறது.
சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் சூரியன் சிவப்பு நிறமாக இருக்கிறதே ஏன்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |