டாட்டா என்பதற்கான அர்த்தம்
பொதுவாக இன்றைய காலத்தில் மொபைலை போனை அதிகமாக பயன்படுத்துகிறோம். காலையில் எழுந்து Good Morning சொல்வதில் இருந்து தூங்க செல்வதற்கு முன் Good Night சொல்லும் வரைக்கும் ஒவ்வொருவரும் இந்த செல்போனிலேயே எல்லாவற்றையும் இமோஜிக்கள் மூலமும் படங்கள் மூலமும் பகிர்ந்துக்கொள்கிறோம். ஆனால் நேரில் சந்தித்துக் கொண்டால் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை சொல்லி பேசிக் கொள்கிறோம். அப்படி பேசி முடித்து விடைபெறும் போது bye அல்லது டாட்டா என்று கூறுகிறோம். இதில் டாட்டா என்று ஏன் சொல்கிறோம் என்றாவது யோசித்திருக்கிறீர்களா. அப்படி யோசித்திருந்து உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
டாட்டா என்று சொல்வதற்கான அர்த்தம்:
டாட்டா என்ற வார்த்தையை உலகில் அதிகமாக பயன்படுத்துவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்த இரண்டு நாடுகளில் தான் அதிகமாக பேசப்பட்டது. இது உலகில் வேறு எந்த நாட்டிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை. ஆங்கிலேயர்கள் கூட பேசுவதில்லை.
டாட்டா என்பது பிரிட்டிஷ் ஆங்கிலத்தின் படி குட் பாய் என்று அர்த்தமாக இருக்கிறது. இவை ஒரு வார்த்தை கிடையாது இது ஸ்லாங்.
ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா
ஸ்லாங் என்பது பிராந்திய மொழியில் இருந்து இழிவான வார்த்தையாக தோன்றிய சொற்கள். பிரிட்டிஷ் பெண்கள் இந்தியப் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் அழைக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூட கூறப்படுகிறது. மேலும் உருது மொழியிலும் வந்ததாகவும் மீண்டும் சந்திப்போம் அல்லது குட் பாய் என்று பொருளாகும்.
இந்த வார்த்தையானது முதலில் 1823 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இதை 1889 இல் இதை வார்த்தையாகப் பயன்படுத்தியுள்ளது. பின்னர் 1940 ஆம் ஆண்டில் இந்த வார்த்தை மிகவும் பிரபலமானது. அப்போதிலிருந்து இதனை ரேடியோ நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது.
மேலும் Tata for Now என்பதை தான் சுருக்கமாக டாடா என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |