உப்பை அடுப்பிற்கு பக்கத்தில் வைப்பீங்களாக அப்போ இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

உப்பு அடுப்பிற்கு அருகில் வைக்கலாமா..!

நாம் செய்யும் சமையல் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு சில பொருட்கள் தேவைப்படும். ஆனால் நாம் சமைக்கும் அனைத்து சாப்பாடுகளிலும் உப்பை மற்றும் சரியான அளவில் சேர்க்கவில்லை என்றால் அதனை சாப்பிடவே முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். அதேப்போல் உப்பை அதிகமாகவும் சமையலில் போட்டு விடக்கூடாது. ஆகவே உப்பினை மட்டும் நாம் சமையலுக்கு ஏற்றவாறு கூடவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் பார்த்து சேர்ப்பது நல்லது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்முடைய வீட்டில் சமையல் சமைக்கும் போது உப்பானது அடுப்பிற்கு அருகில் தான் இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் உப்பினை எடுக்க முடியாது என்பதால் அடுப்பிற்கு அருகிலேயே வைத்து சமைப்பார்கள். இதன் படி பார்க்கையில் இன்றைய பதிவில் உப்பினை அடுப்பிற்கு அருகில் வைக்கலாமா என்றும், அப்படி வைப்பதனால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா

ஏன் உப்பை அடுப்பிற்கு அருகில் வைக்கக்கூடாது தெரியுமா..?

உப்பு ஆனது சமையலின் சுவையை மாற்றுவதோடு மட்டும் இல்லாமல் நமது உடலுக்கு தேவையான அயோடின் சத்துக்களையும் வழங்குகிறது. அந்த வகையில் உப்பினை ஏன் அடுப்பிற்கு அருகில் வைக்கக்கூடாது தெரியுமா..?

do no salt should not be placed near the stove in kitchen in tamil

சமையலில் சேர்க்கப்படும் உப்பில் இருக்கும் அயோடின் சத்து ஒரு வேதிப்பொருள் ஆகும். இத்தகைய வேதிப்பொருள் ஆனது அழிவடையும் தன்மை கொண்டது. ஆகையால் இதனை நாம் அடுப்பிற்கு அருகில் வைப்பதன் வெப்பத்தின் மூலம் உப்பில் காணப்படும் அயோடின் சத்து ஆனது அழிவடைந்து விடும்.

இவ்வாறு அயோடின் சத்து இல்லாமல் இருக்கும் உப்பினை சமையலில் சேர்ப்பதனால் நமக்கு எந்த விதமான நன்மையும் கிடைக்காது.

அதேபோல் பீங்கான் பாத்திரத்தில் வைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது பீங்கான் பாத்திரம் இல்லாமல் மற்ற பாத்திரங்களுடன் வைப்பதனால் இதில் உள்ள வேதிப்பொருள் ஆனது உலோகளுடன் சேர்வதனால் தாக்கம் ஏற்பட்டு விடும். இவ்வாறு தாக்கம் ஏற்படுவதனால் அயோடின் சத்து ஆனது அழிவடைந்து விடும்.

ஆகவே சமையல் அடுப்பிற்கு அருகில் உப்பு வைக்கக்கூடாது என்று கூறுவதற்கான அறிவியல் காரணம் மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு மட்டுமே ஆகும்.

தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு கலர்ல இருக்குனு உங்களுக்கு தெரியுமா 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement