Why Tattoos Permanent in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் அனைவருமே தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைக்கும் உங்களுக்கு எங்கள் பொதுநலம்.காம் பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அதுபோல இன்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை தான் காணப் போகின்றோம். சரி பச்சை குத்துவது அழியாமல் இருக்க காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
தூங்கும் போது கொசு காதில் கத்த என்ன காரணம் தெரியுமா
பச்சை குத்துவது அழியாமல் இருக்க காரணம் என்ன..?
பெரும்பாலும் இன்றைய நிலையில் பலரும் பச்சை குத்துகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் டாட்டூ (Tattoo) போட்டு வருகிறார்கள். இது இப்பொழுது மாடர்னாக மாறிவிட்டது.
சிலர் ஏதாவது டிசைன்களை Tattoo ஆக போடுகிறார்கள். இன்னும் சிலர் அம்மா, அப்பா மற்றும் மனதிற்கு பிடித்தவர்களின் பெயரை Tattoo ஆக போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிலர் உடல் முழுவதும் Tattoo போடுகிறார்கள். சரி நீங்கள் Tattoo போட்டிருக்கிறீர்களா..?
பேனா மூடியில் இந்த ஓட்டை ஏன் இருக்குனு உங்களுக்கு தெரியுமா
Tattoo போட்டவர்களும் சரி Tattoo போடாதவர்களும் சரி பச்சை குத்துவது காலத்திற்கும் அழியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
பச்சை குத்தும் போது வண்ண நிறமிகளால் பூசப்பட்ட ஊசிகளை நம் தோலின் மேல் அடுக்கில் இருந்து தோலின் இரண்டாவது அடுக்கில் குத்தப்படுகின்றன. இந்த அடுக்குகள் கொலாஜன் இழைகள், சுரப்பிகள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் போன்றவற்றால் ஆனது.
சூடான உணவுகள் சிறிது நேரத்தில் ஆறுவதற்கு காரணம் என்ன தெரியுமா |
அதுபோல பச்சை குத்துவதை நோய்எதிர்ப்பு சக்தி தான் நிரந்தமாக்குகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் இது தான் உண்மை.
அதாவது நாம் பச்சை குத்தும் போது நமது உடலில் காயங்கள் ஏற்படுகிறது. இந்த காயங்களை சரி செய்ய நம் உடலில் இருக்கும் நோய்எதிர்ப்பு சக்தி என்று சொல்லக்கூடிய வெள்ளை உயிரணுக்கள் காயங்களில் இருக்கும் நிறமிகளை சாப்பிடுகிறது. அதுபோல பெரிய நிறமிகளை சாப்பிட முடியாமல் அப்படியே விட்டுவிடுகிறது. இதன் காரணமாக தான் பச்சை குத்துவது காலத்திற்கும் அழியாமல் அப்படியே இருக்கிறது.
பணத்தை தயாரிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |