தூங்கும் போது கொசு காதில் கத்த என்ன காரணம் தெரியுமா..?

Advertisement

Why Do Mosquitoes Buzz In Our Ears in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி..! அதுபோல உங்களுக்கும் இந்த பதிவு பயனுள்ள பதிவாக தான் இருக்கும். பொதுவாக நம்மில் பலரது வீடுகளில் கொசு தொல்லை என்பது இருக்கும். அதுபோல முன்பெல்லாம் இரவு நேரங்களில் மட்டும் தான் கொசுக்கள் வரும்.

ஆனால் இப்பொழுது பகல் நேரத்திலும் கொசுக்கள் அதிகமாகவே காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் 24 மணிநேரமும் கொசுக்கள் இருக்கும் இடமும் இருக்கின்றன. உடனே உங்களுக்கு என்ன சுவாரஸ்யமான தகவல் என்று சொல்லிவிட்டு கொசுவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம் என்று யோசிப்பீர்கள். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!

கொசுக்கள் நீரின் மேலே எவ்வாறு நடக்கிறது தெரியுமா

தூங்கும் போது கொசு காதில் கத்த என்ன காரணம்..?

தூங்கும் போது கொசு காதில் கத்த என்ன காரணம்

பெரும்பாலும் நம்மில் பலரது வீடுகளில் கொசுக்கள் இருக்கிறது அல்லவா..! சரி உங்கள் வீட்டில் கொசு தொல்லை இருக்கிறதா..? அப்படியென்றால் நீங்கள் தூங்கும் கொசுக்கள் உங்கள் காதில் வந்து சத்தமிட்டு உங்களை தூங்கவிடாமல் செய்திருக்கும்.

அப்போ ஏன் கொசுக்கள் காதில் வந்து சத்தமிடுகிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். வாங்க நண்பர்களே தூங்கும் போது கொசு காதில் கத்த என்ன காரணம் என்று தெரிந்து கொள்வோம்..!

பேனா மூடியில் இந்த ஓட்டை ஏன் இருக்குனு உங்களுக்கு தெரியுமா

பெரும்பாலும் நம் காதில் பெண் கொசுக்கள் தான் சத்தமிடுகின்றன. பெண் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்ய போதுமான ஆற்றலைப் பெறுவதற்காக,  இனச்சேர்க்கைக்கு பிறகு இரத்த உணவை தேடி அலைகின்றன. அப்போது தூரத்தில் இருந்து பெண் கொசுக்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுக்கின்றன.

 அந்த கார்பன் டை ஆக்சைடானது பெண் கொசுவை உணவு தேடுவதைத் தூண்டுகிறது.  இதனால் பெண் கொசுக்கள் உணவை தேடி முன்னும் பின்னுமாக பறக்கிறது. அந்த நேரத்தில் கொசுவின் இறக்கைகள் அடிப்பதால் ஏற்படும் ஒரு பக்க விளைவு தான் அந்த சத்தமாகும். அதாவது கொசுவின் இறக்கைகளில் இருந்து வரும் சத்தம் தான் நாம் தூங்கும் போது நம் காதுகளில் கேட்கிறது.  

பணத்தை தயாரிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement