கொசுக்கள் நீரின் மேலே எவ்வாறு நடக்கிறது தெரியுமா..?

Advertisement

Do You Know How Mosquitoes Walk Above Water

அனைவருடைய வீட்டிலும் கொசுக்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக மாலை 6 மணி வந்தால் போதும் வீட்டிற்குள் எப்படியாவது கொசுக்கள் வந்து விடுகிறது. நாமும் இத்தகைய கொசுக்களை வீட்டிற்குள் வராமல் இருக்க வைப்பதற்கு என்ன என்னவோ செய்து இருப்போம். ஆனால் இவற்றை எல்லாம் கடந்து கொசுவானது வீட்டிற்குள் வந்து விடும். இப்படிப்பட்ட கொசுவை பற்றிய நமக்கு அவ்வளவாக தெரிவது இல்லை. நமக்கு தெரிந்த ஒன்று என்றால் கொசு என்றால் கடிக்கும் அவ்வளவு தான். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கொசுக்கள் மட்டும் இல்லாமல் மற்ற உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மையுடன் விளங்குகிறது. அப்படிப்பட்ட தனித்தனிமை என்னவென்று நம்மில் பலருக்கு தெரிவது கூட இல்லை. அந்த வகையில் கொசுக்கள் எவ்வாறு நீரின் மேலே நடக்கிறது என்று தெரியுமா..? இத்தகைய செய்தி பலரையும் வியப்பில் வைக்கக்கூடியதாக செய்கிறது. அதனால் கொசுக்கள் எப்படி தண்ணீரில் நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இட்லி எந்த நாட்டில் இருந்து வந்தது மற்றும் அதனுடைய பெயர் காரணம் பற்றி தெரியுமா.. 

கொசுக்கள் நீரின் மேலே எவ்வாறு நடக்கிறது:

கொசுக்கள்

கொசுக்கள் அளவில் சிறியதாக இருந்தால் கூட இது கடித்தால் நமது உடலுக்கு நிறைய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நம்முடைய உடலில் கொசுக்களின் கடியால் மலேரியா, டெங்கு, சிக்கன் குன்யா போன்ற காய்ச்சல்கள் வருகிறது.

இப்படிப்பட்ட கொசு நீரின் மேலே எப்படி நடக்கிறது தெரியுமா..? அதாவது கொசுக்களின் கால்கள் மற்ற உயிரினங்களின் கால்களை போல இல்லாமல் கொஞ்சம் மாறுபாட்டுடன் வளைந்து இருக்கக்கூடியதாக உள்ளது.

அத்தகைய கால்கள் யாவும் Tarsus, Femur மற்றும் Tibiya என்ற மூன்று விதமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றான Tarsus என்னும் பகுதி கொசுவின் காலில் கீழ் பகுதியில் மெலிதான தோற்றத்துடன் காணப்படுகிறது. இந்த Tarsus பகுதி தான் அதனுடைய செதில்களால் நீரினை விலக்கிவிட்டு அதன் மேலே நடக்க செய்கிறது.

 அதாவது Tarsus பகுதி ஒரு கொசுவின் எடையினை போலவே 20 மடங்கு எடையினை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டிருப்பதால் நீரின் மேலே  கொசு தன்னுடைய மொத்த எடையினையும் செலுத்தாமல் லேசாக மட்டும் செலுத்துவதால் நீரின் பரப்பு விசையானது கொசுவை நீரின் மேலே நடக்க செய்கிறது. இதுவே கொசு நீரின் மேலே நடப்பதற்கான காரணம்  ஆகும். 
சிப்ஸ் பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது தெரியுமா.. 

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement